அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் தொடங்குகிறது­­­­­­­­­­

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, பணிநிரவல் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்களுக்கு நாளையும் (நவ. 29), பட்டதாரி … Read more

அடம்பிடிக்கும் பருவமழை… மீண்டும் எப்போது பெய்யும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எங்கே? என்று பலரும் தேடும் நிலை தான் காணப்படுகிறது. அதிலும் பெரிய ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. மிகவும் லேட்டாக தான் விடிகிறது. சீக்கிரமாகவே இரவு வந்து விடுகிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வட தமிழகத்தை சேர்ந்த மக்கள் கூறி வருகின்றனர். பனி வந்துவிட்டால் அப்புறம் மழை பெய்வது குறைந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. பொய்க்கும் பருவமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு … Read more

ஜெயக்குமார் பேசக்கூடாது! புகழேந்தி கடும் சாடல்!

கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும்தான் வெற்றி பெற்றார், தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக்கூடாது என கூறினார்.  மேலும், பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, பொதுக்குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது? அங்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை காரனும், கொலை காரனும் கட்சி நடத்துகிறார்கள். எல்லோரும் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார்கள். கட்சி காப்பாற்றப்பட வேண்டும், எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடமாடும் ஆய்வக வாகனங்கள் தொடக்கம்: திருச்சியில் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் … Read more

கோவை: வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருள் – இரு அசாம் இளைஞர்கள் கைது

கோவையில் புதிய வகை போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பறிமுதல் செய்த போதைப் பொருள்களை போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார், தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். … Read more

சிறுவன் உயிரிழப்புக்கு மருத்துவமனை காரணமல்ல! மா.சுப்பிரமணியனின் சூப்பர் விளக்கம்!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தாடகை வளர்ச்சி குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றை வயது சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் சிறுவன் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெற்றோர்கள் அனுமதி உடன் மயக்க மருந்து செலுத்துதியாக கூறப்படுகிறது. சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில்  வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்ததாக தெரிய … Read more

அறிகுறி இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை வேண்டாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை தேவை இல்லை என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். ‘தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்யக் கூடாது – தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை’ என்ற தலைப்பிலான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று (நவ.27) வெளியாகியிருந்தது. ‘தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை … Read more

'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்…' – சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு, அதனை நாடு முழுவதும் பரப்பும் வகையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ. 27) நடைபெற்றது. இந்த பயணத்தில், 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக … Read more

திருவாரூர் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக்கூறி அனைத்துக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.