ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும். ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5ஆம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக இடைக்காலப் … Read more

முகநூல் மூலம் பழகி ரூ.பல லட்சம் மோசடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: முகநூல் மூலம் பழகி பல லட்சம் மோசடி செய்த வழக்கை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன் என்பவர், ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினார். இதன்படி … Read more

மதுரையில் பறக்கும் பாலத்துக்கு டெண்டர் அறிவிப்பு! எத்தனை கோடி ரூபாய்க்கு தெரியுமா?

மதுரை கோரிப்பாளையத்தில் பறக்கும் பாலம் அமைக்க 175 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பாலப்பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தகவல் தெவித்துள்ளனர். மதுரையில் முக்கிய சந்திப்பான கோரிப்பாளையம் சந்திப்பில் 210 கோடி ரூபாயில் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான நில ஆர்ஜித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இச்சந்திப்பில் அழகர்கோவில், பனகல், செல்லுார் பாலம் ஸ்டேஷன், ஏ.வி.பாலம், ஆழ்வார்புரம் ரோடுகள் சந்திக்கின்றன. இச்சந்திப்பை சுற்றி முக்கிய வர்த்தக நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, கல்லுாரி, பள்ளிவாசல் … Read more

அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், சேப்பாக் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் … Read more

திமுக துணை அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், இணைசெயலாளர்கள், துணை செயலாளர்கள், உறுப்பினர்கள், தணிக்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மருத்துவ அணி தலைவராக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, செயலாளராக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் நாகநாதன், மருத்துவ அணி இணைசெயலாளராக இரா.லட்சுமணன்எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறியாளர் அணி தலைவராக துரை கி.சரவணன், இணை செயலாளராக அ.வெற்றி அழகன் எம்எல்ஏ, துணை செயலாளராக … Read more

அரசியலில் களமிறங்குவேன்… உதயநிதி தொகுதியில் போட்டி: சவுக்கு சங்கர் பொளேர்!

ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கர், நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த … Read more

காசி தமிழ் சங்கமம் ரயில் கோவையில் இருந்து இன்று காலை கிளம்பியது

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடத்திவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து செல்லும் 5வது ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 90 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை இன்று துவங்கினர். கடந்த 20ம் தேதி கோவையிலிருந்து சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், … Read more

மகள் கொடுமை தாங்க முடியலை கருணை கொலை செய்ய உதவுங்கள்: தேனி கலெக்டரிடம் மூதாட்டி மனு

தேனி: மகளின் கொடுமை தாங்க முடியாத தாய், தன்னை கருணை கொலை செய்யக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காலனியில் வசிப்பவர் பெருமாள் மனைவி பாக்கியலட்சுமி (62). இவர் நேற்று தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணமாகி விட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார். 2வது மகளின் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர், வேறு … Read more

சீமானை சுற்றி வளைத்த இந்திய ராணுவம்! எதற்கு தெரியுமா? சீமான் சொன்ன புது கதை!

விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய சீமான் “இரண்டு படங்கள் நடத்திவிட்டால் தலைவா என்கிறார்கள், தமிழ்நாடே உனக்கு காத்திருக்கிறது என்கிறார்கள், எங்கு காத்திருக்கிறது. உடனே நாடாள வந்த மகாராஜா என்று துதி பாடுகிறார்கள். இது தமிழ்நாடா? இல்லை தரிசுக்காடா? தமிழின மக்கள் ஒன்றிணைந்தால் தான் நமது வாழ்வு … Read more

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு: உரிய சட்டம் இயற்ற அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசின் திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வல்லம்கிராமத்தில் சிப்காட் அமைக்க கடந்த 1997-ல் வசந்தா கங்காதரன் என்பவருக்கு சொந்தமான 19.08 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.5 ஏக்கருக்கு மட்டுமே கடந்த 2016-ல் … Read more