சீர்காழி மக்களுக்கு அரசின் ரூ.1000 நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

சென்னை: “அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுக்க வேண்டும்” என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: “மயிலாடுதுறையில் நேற்று நான் சென்று பார்த்தபோதுகூட, பயிர்கள் எல்லாம் அழிந்து நாசமாகியிருந்ததை காணமுடிந்தது. … Read more

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான இளம்பெண்ணை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும்: யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி என்ற இளம்பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும்.  அவருடன் யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 … Read more

நீலகிரி: ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டத்தில் ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் … Read more

பணி மாறுதலில் சென்றவரை ‘சென்னை மாநகராட்சி துணை ஆணையர்’ என்று குறிப்பிட்ட அரசிதழ்

சென்னை: சென்னை மாநகராட்சியில் இருந்து 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாறுதலில் சென்ற அதிகாரியை, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இதற்காக அமைக்கப்படும் குழுவில் தொழிலாளர் நலத் துறை, அரசு மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகள் இடம்பெறுவார்கள். இதன்படி, தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க … Read more

 அருவங்காடு வெடிமருந்து ஆலையில் மீண்டும் வெடி விபத்து

குன்னூர்: அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 19ம் தேதி தொழிற்சாலையில் சிடி செக்சனில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த பிரிவில் 8 பேர் பணியாற்றியுள்ளனர். … Read more

கோவை ஈஷா மையத்திற்கு ஷாரிக் உடன் வந்தது யார்? கால் டாக்ஸி டிரைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிக்க வைத்து தீவிரவாத தாக்குதல் முயற்சியில் முகமது ஷாரிக் என்பவன் ஈடுபட்டான். இந்த சம்பவம் அரங்கேறும் பொழுது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வருகிறான். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர்: சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ”தமிழகத்தில் … Read more

கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுப்பு: கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஜி.கே.எம் நகர் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நேற்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது, தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் சிலரை, கட்டணம் செலுத்தாததால், கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத … Read more