வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை; அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
ஜெயங்கொண்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து வரும் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் திருச்சி வருகிறார். அங்கிருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காகித ஆலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகள் மற்றும் அதில் கிடைத்த பொருட்களை முதல்வர் பார்வையிடுகிறார். பின்னர் 29ம் தேதி அரியலூரில் நடைபெறும் … Read more