குப்பை லாரிகளை இயக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா? விரைவில் விசாரணை!

சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி … Read more

சென்னை அரும்பாக்கத்தில் கோர விபத்து; ஆந்திர காதல் ஜோடி லாரியில் அடிபட்டு உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்சர்லையா பிரசாத்(30).  திருமுடிவாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர்  பாபிலோனா( வயது  23) ஜாபர்கான் பேட்டையில் தங்கி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து வந்தனர் . பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பின்னர் ஜாபர்கான் பேட்டை செல்வதற்காக ‘ u … Read more

குஜிலியம்பாறையில் வறட்டாற்று ஓடையில் சிக்கி கிடக்கும் முட்புதர்கள்-மழைநீர் தேங்காமல் செல்ல தூர்வார கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் செல்லும் வறட்டாற்று ஓடையில் முட்புதர்கள் சிக்கி, மழைநீர் செல்லும் போது அடைப்பு ஏற்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி அடைப்பு ஏற்பட்ட இடத்தில் தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறையில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ள சாலை எதிரே வறட்டாற்று ஓடை செல்கிறது. மழை பெய்யும் நாட்களில் ஆர்.கோம்பை, ராமகிரி மலை அடிவார பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்த வறட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும். இந்த … Read more

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் மூன்று பேர் கைது.!

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் சென்னை தண்டையார்பேட்டை சுப்புராயன் தெரு பகுதியில் தியாகராய பூங்கா பின்புறம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் … Read more

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள சூழலில், காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மிக அவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது. ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். கொடைக்கானலில் பலத்த காற்றுடன் … Read more

மாண்டஸ் புயல் | சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் ரத்து: புதுவை போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று புயல் கரையை கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் … Read more

ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் மறுப்பதும் காவல்துறைக்கே அதிகாரம்: நீதிமன்றம் உத்தரவு!

ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் காவல்துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோவை நகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை எஸ் பி க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு … Read more

Cyclone Mandous Live: இடியா, மழையா, புயலா எங்களை ஒன்றும் செய்யாது – ஆம்னி பேருந்து உரிமையாளர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை … Read more

உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி!: பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சல்மான் (22), நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் சல்மான் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நாளுக்கு நாள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. ஆன்லைன் … Read more

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை கடல் சீற்றத்தால் சேதம் – மாநகராட்சி அறிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே மாற்றுத்திறனாளிகளுக்காக 1.14 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மரப்பாதை மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ளது. 380 மீட்டர் நீளத்தில் 3 மீட்டர் அகலத்தில் பிரேசில் தேக்கு, வேல மரம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட இந்த மரப்பாதை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என். நேரு, மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட … Read more