மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் – தயார் நிலையில் மீட்பு படை..

‘மாண்டஸ்’ புயல் தாக்கும் அச்சம் உள்ள மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ்’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது … Read more

மாண்டஸ் புயலால் கனமழை | செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் உபரி நீர் திறக்கப்படுகிறது

திருவள்ளூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7-ம் தேதி இரவு ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்றது. இது தற்போது தீவிரப் புயலாக முன்னேறி வருகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் இது புயலாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் … Read more

Cyclone Mandous: புயல் வரும் போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து புயல்கள் உருவாகி கனமழை கொட்டித் தீர்க்கும். குறிப்பாக கரையை கடக்கும் போது பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வப்போது அரசின் அறிவிப்புகளை கவனிக்க வேண்டும். அதேசமயம் புயல் வருவதற்கு முன்பு, வரும் போது, வந்த பின்பு என நாமாக பின்பற்ற வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. என்ன செய்ய வேண்டும்? * கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை … Read more

மாண்டஸ் புயல்: சாலையில் சீறி பாயும் கடல் அலைகள்! மக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் வடசென்னை பொருத்தவரை நேற்று இரவு  முதல் அதிகளவு காற்று வீசப்படுவதால் கடலோரப் பகுதிகளில் அலைகள் சீறி பாய்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னை எண்ணூர் விரைவு சாலை தாதாங்குப்பம் பகுதியில் கடல் அலைகள் மாண்டெக்ஸ் புயல் காரணமாக 100 முதல் 200 மீட்டர் வரை சீறி பாய்ந்து சாலையை கடந்து … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மாமல்லபுரத்தில் நள்ளிரவில் கரையை கடக்கும் மாண்டஸ்: சென்னை வானிலை மையம் அறிக்கை

மாமல்லபுரத்தில் நள்ளிரவில் கரையை கடக்கும் மாண்டஸ்: சென்னை வானிலை மையம் அறிக்கை Source link

செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி அணை திறப்பு.. சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக  காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் முக்கிய ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியள்ளது. மேலும், ஒரு ஒரு சில நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதியதாக மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 11.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா … Read more

முதல்வர் வீட்டில் சோகம்.. பணியில் இருந்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் மனோகர் (59). இவர், சென்னை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (டிச.8-ம் தேதி) மதியம் ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். … Read more

சென்னைக்கு 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்: கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மாண்டஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

3 முறை செஞ்சுரி அடிச்ச சூறாவளி… சென்னையை மாண்டஸ் புயல் புரட்டி எடுக்குமா?

மாண்டஸ் புயல் வேலையை காட்டி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கிடையில் குளிர் வேறு வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான மாண்டஸ் படிப்படியாக நகர்ந்து கரையை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி காற்று வீச வாய்ப்பு வழக்கமாக புயல் கரையை கடக்கும் போது பலத்த … Read more