காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்ள இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது. இந்த கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மீட்கப்பட்டுள்ள பழமையான இடத்தை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ஸ்வாதி ஆஜர் உண்மையை மறைத்தால் அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை: கோகுல்ராஜ் ெகாலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி, ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று ஆஜரானார். அப்போது வீடியோவில் உள்ள பெண் நானில்லை என்றார். அதற்கு நீதிபதிகள், ‘தன்னையே தெரியாது என்பதா? உண்மையை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், 30ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுளளனர். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் … Read more

பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை: பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கோரியுள்ளது. தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில், இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட ஒரு நபரின் சொத்துகளின் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு ஒன்று நடந்தது. சொத்துகளுக்கு அந்த நபரின் முதல் மனைவியின் வாரிசுதாரர்களும், இரண்டாவது மனைவியின் வாரிசுதாரர்களும் உரிமை கோரியிருந்தனர். அந்த வழக்கில் ஒருதரப்புக்கு சாதமான தீர்ப்பு வெளியான நிலையில். அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை … Read more

இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

கன்னியாகுமரி: இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளராக சமீபத்தில் ஆர்.என்.சிங், பொறுப்பேற்றார். தற்போது அவர் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக திருவனந்தபுரம் கோட்டத்தில் ஆய்வு பணிக்காக அவர் நேற்று,   கன்னியாகுமரி வந்தார். பின்னர் காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து அவர் ஆய்வை … Read more

30 நாள்களில் பதில்.. ரூ.10 கட்டணம்.. உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் ஆர்.டி.ஐ. போர்ட்டல் தொடக்கம்

30 நாள்களில் பதில்.. ரூ.10 கட்டணம்.. உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் ஆர்.டி.ஐ. போர்ட்டல் தொடக்கம் Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வரும் நவம்பர் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு … Read more

பரந்தூர் விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது: ஆர்டிஐ மனுவிற்கு டிட்கோ பதில்

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பதில் அளித்துள்ளது. காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. … Read more

தன்னிச்சையாக யாரும் இனி செயல்பட முடியாது மாநில நிகழ்வுகளை காங். தலைமை உன்னிப்பாக கவனிக்கிறது: நெல்லையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ பேட்டி

நெல்லை: மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. எனது சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைத்த கட்சித் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்தார். நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம், கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கவனிப்பதில்லை என்ற வீண் பழி, இதன் மூலம் … Read more