தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் (நவ.16) முதல் நவ.20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய … Read more

கடத்தி கட்டாய திருமணம் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் மாணவி விஷம் குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சேலம்: ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால், 17 வயது மாணவி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து, சேலம் அரசு  மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெரம்பலூர்  மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்1 மாணவி, கடந்த மாதம்  திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தினர். அதில், அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற … Read more

1.4 கிலோ கஞ்சா பறிமுதல்.. திருச்சியில் கைதான நபர்.! 

திருச்சி மாநகர் பகுதியில் எடமலைப்பட்டி புதூர், ராம்ஜி நகர் மற்றும் கருமண்டபம் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை நிகழ்கிறது.  அதனை தடை செய்வதற்காக மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த நிலையில், மொத்த விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரியான மதன் என்கிற மதுபாலனை நேற்று தனிப்படை போலீசார் மடக்கி அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, இன்று எடமலைப்பட்டி … Read more

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து 

சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய … Read more

குமரி எஸ்எஸ்ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதல்: அதிகாரிகள் விசாரணை

சேலம்: கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ.யை சுட்டுக்கொலை செய்த வழக்கில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 2020 ஜனவரி 8ம்தேதி  சிறப்பு எஸ்.ஐ. வில்சன் பணியில் இருந்தார். அப்போது அவரை 2 பேர் துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் தப்பி சென்றது தெரியவந்தது. அதனை வைத்து அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரை போலீசார் … Read more

ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க

ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க Source link

மழை வெள்ளம்.. நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் … Read more

ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில வன உயிரின வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.16ம்) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “காடுகள் இன்றி நீர்வளம் சிறக்காது! நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது! எனவே, வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம். காடுகள் வளம்பெற வன உயிரினங்கள் அவசியம்” இந்த ஆட்சி … Read more

ஸ்கெட்ச் போட்டு பணத்தை பறிக்கும் இணைய தளங்கள்: மேட்ரிமோனி அலப்பறைகள்

* லட்சக்கணக்கில் பதிவு கட்டணம் வசூல்* ஒரே பெண்ணின் போட்டோவை பலமுறை காட்டி மோசடி* கடிவாளம் போடுமா ஒன்றிய அரசு வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். ஏனென்றால் இரண்டுமே அவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது. எதிர்பாராத பல இடைஞ்சல்களை, சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்றைக்கு திருமண ஏற்பாடுகளுக்கு அவ்வளவு மெனக்கெட தேவையில்லை. ஆள்பலமும் தேவையில்லை. பெண்ணோ, மாப்பிள்ளையோ கிடைத்தால் போதும், மண்டபம், சமையல், அலங்காரம் துவங்கி முதலிரவு கட்டில் அலங்காரம் வரை செய்து தருவதற்கு ஆட்கள், … Read more