பெண்ணின் வீட்டு சுவரை இடித்த பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமாரி. ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பை சேர்ந்தவர் ராமர். ஜெயங்கொண்டம் நகர பாஜ தலைவர். இந்நிலையில், வசந்தகுமாரி புறம்போக்கு இடத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அத்துமீறி சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவரை, ராமர் இடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் செய்தார். அதில், பட்டா உள்ள இடத்தில் தான் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டியுள்ளேன். … Read more