காப்பீட்டு நிறுவனங்களின் புதிய விதிமுறையால் விவசாயிகளுக்கு பாதிப்பு; 70 % சேதம் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு

* அதிக ஆபத்து மண்டலமாக திருச்சி அறிவிப்பு* 48,293 பேரில், 16,587 பேருக்கு மட்டுமே இழப்பீடு திருச்சி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் இழப்பு ஏற்படும் சமயங்களில் அந்த இழப்பீட்டை ஈடுசெய்ய தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்து, விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தாமல் இருக்க எந்த வகையில் தட்டிகழிக்கலாம் என்று பார்ப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் … Read more

கும்பகோணம்: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகள் மீட்பு!

கும்பகோணம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியில் பழமை வாய்ந்த சிலைகளை மௌன சாமி மடத்தின் நிர்வாகிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, இந்து முன்னணி சேர்ந்த 20 நபர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் மௌனசாமி மடத்தெருவில் அமைந்துள்ள மௌனசாமி மடத்திற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா … Read more

சென்னை ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு! ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

வங்க கடலில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தின் பெருமானம் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.  குறிப்பாக புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான செங்குன்றம் மற்றும் பொன்னேரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 192 கன அடியாக … Read more

கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சி: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது..!

மதுரையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் உதவியுடன் கூலிப்படையால் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பாலை பி.வி.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர், மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வைஷ்ணவி (25). செந்தில்குமார், வருடத்திற்கு இரண்டு முறை குடும்பத்தை பார்க்க ஊருக்கு வந்து செல்வார். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் மதுரை வந்தபோது செந்தில்குமாருக்கும், அவரது அண்ணன் நவநீதகிருஷ்ணனுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு … Read more

கலை, அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு அடுத்த கல்விஆண்டு (2023-24) முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். உயர்கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துறை செயலர் தா.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பல்கலைக்கழகங்கள் மேம்பாடு, … Read more

ஒசூரில் உள்ள மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

கிருஷ்ணகிரி : ஒசூரில் உள்ள ரோஜா, தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்ட மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மலர் சாகுபடி பகுதிகளை வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

கரூர்: வலிப்பு ஏற்பட்டு மயங்கிய மாணவன் மரணம் – பள்ளி நிர்வாகம் மீது புகார்!

கரூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் நேற்றிரவு திடீரென உயிரிழந்தார். வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கனவே மாணவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் பள்ளி நிர்வாகி, விடுதி காப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோரி காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திண்டுக்கல் … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்.! எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி.!

சென்னை ஆவடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் ஏகாம்பரசத்திரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ்(21). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயிலில் வந்தார். பின்பு அங்கிருந்து அவினாஷ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் … Read more