ஆளுநர் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்: தமிழிசை

சென்னை: “ஆளுநர் பதவி என்பது முதல் குடிமகன் என்பதால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை அம்பேத்கர். அவரது நினைவு நாளை போற்றுவதில், மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நேற்று … Read more

திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்… டோன்ட் கேர் என்று சொல்லும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

தொடரும் உட்கட்சி பூசல்: இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என கடந்த சில, பல மாதங்களாக அதிமுத ரெண்டு பட்டு இருந்தாலும், கட்சியின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களின் தயவில் மசூடம் சூடி கொண்டுள்ளார். கட்சி நிர்வாகிகளில் பலர் வேண்டுமானால் இபிஎஸ் பக்கம் இருக்கலாம். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் என்று ஓபிஎஸ் அணியினர் … Read more

சின்னமனூர் அருகே பலத்த சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகள்-சீரமைக்க மக்கள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பலத்த சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கோரியுள்ளனர்.சின்னமனூர் அருகே போடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் மற்றும் முல்லைப் பெரியாற்றின் பாசனத்தின் கீழ் விவசாயமே பிரதானமாக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய காலனி என்ற … Read more

”இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” – சூர்யா சிவா அதிரடி ட்வீட்

ஆடியோ சர்ச்சையால் பாஜக கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் சில தினங்களுக்கு முன்பு செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த … Read more

#BigBreaking | சென்னை அருகே புயல் – வானிலை ஆய்வும் மையம் வெளியிட்ட புகைப்படம்!

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்று தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி, புதிதாக உருவாக்கக்கூடிய இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற எட்டாம் தேதி … Read more

#BREAKING: இனி இவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,ஆசிரியை நித்யா, பி.எட். தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்தாலும், மேலும், பி.ஏ. படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது என்று குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட … Read more

தஞ்சாவூர்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விசிகவினர் தடுத்ததால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், சாலையோரம் ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் அலுவலகத்தின் முகப்பில் 7 அடி உயர அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி இன்று (டிச. 6) காலை விடுதலை சிறுத்தைகள், … Read more

'நடிகைகளை வெச்சிக்கிற கம்பெனி'.. உதயநிதியை வம்புக்கிழுக்கும் திருச்சி சூர்யா..

பாஜக – கட்சிகளிடையே கருத்து மோதலையும் தாண்டி பெண்களை மையப்படுத்தி விமர்சித்துக்கொள்வது வழக்கமாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மட்டுமின்றி மேடையிலேயே கொச்சையாக பேசி வருகின்றனர். கட்சிகளின் நிர்வாகிகள் இவ்வாறு பேசி வருவதை தலைமை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. அண்மையில் திருச்சி சூர்யா பேசி வெளிவந்த ஆடியோ காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்தது. கட்சியின் பெண் நிர்வாகியை பெண்ணுறுப்பை அறுப்பேன் என்று திருச்சி சூர்யா பேசியதற்கு கட்சி தலைவர் அண்ணாமலை கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் … Read more

கண்மாய் தண்ணீரை பகிர்வதில் பிரச்சனை இரண்டு கிராமமக்கள் போராட்டம்-உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்மாய் தண்ணீரை பகிர்வது தொடர்பாக இரண்டு கிராமத்தினர் போராட்டம் நடத்தி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவகோட்டை தாலுகா சிறுவாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமையான முத்துநாடு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 30க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. காரைக்குடியில் இருந்து வரும் தேனாற்று தண்ணீர் மூலம் முத்துநாடு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து 45 கண்மாய்களுக்கு செல்கிறது. … Read more