ஒரு மாதத்தில் 4வது முறை; 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கைக்கு அன்புமணி கண்டனம் 

சென்னை: ஒரு மாதத்தில் நான்காவது முறையாக 14 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை … Read more

இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது: பிரதமருக்கு நினைவூட்டிய அமைச்சர்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 11,12 தேதிகளில் தொடார்ந்து பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீர்காழியில் வரலாறு காணாத வகையில் சுமார் 112 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன, வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து … Read more

ஆண்மை, உடல் வலிமை பெருகும் என வதந்தி; விழுப்புரம் மாவட்ட காடுகளில் வேட்டையாடப்படும் கவுதாரிகள்: வழக்கு பாயும் என வனத்துறை எச்சரிக்கை

விழுப்புரம்: காடுகளில் வாழும் கவுதாரியை பிடித்து சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தியால், விழுப்புரம் மாவட்டத்தில் கவுதாரிகள் வேட்டையாடப்பட்டு ஜரூராக விற்பனை நடந்து வருகின்றது. இதுபோன்ற வேட்டை சம்பவத்திலோ, வாங்கிசாப்பிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகளும், சமூகக்காடுகளும் உள்ளன. இதில், குறிப்பாக மான், காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சிகளை விற்பனை செய்வதும், மான் தோல், கொம்புகளை விற்பனை … Read more

திருத்தணி: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

திருத்தணி அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, புண்ணியம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் – திவ்யா தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா, திருத்தணி அடுத்த மத்தூர் ஏ.எம்.பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் … Read more

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகை தமன்னாவின் பிஸினஸ்மேன் கணவர் யார்?

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகை தமன்னாவின் பிஸினஸ்மேன் கணவர் யார்? Source link

தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு.!

தமிழகத்தில் இதுவரை சுமார் 67.23 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையில் பதிவு செய்துள்ள தரவுகளை அரசு வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.  அந்த தரவுகளின் படி, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்காக இதுவரை 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்தவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்களும், 35 லட்சத்து … Read more

ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை..!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய தந்தை, கைகலத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதில், தன்னுடைய மகளை வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உட்பட சிலர் கடத்திச் சென்றிருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மணிகண்டன் மற்றும் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். விசாரணையில், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மணிகண்டன் கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர், … Read more

வேறெதுவும் குறையில்லை; என் குழந்தைதான் போய்விட்டாள்.. – மாணவி பிரியாவின் தந்தை உருக்கம்

சென்னை: “என் குழந்தை இறந்த பிறகு, தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளது. வேறெதுவும் குறையில்லை, என் குழந்தைதான் போய்விட்டாள். அதுதான் எங்களது வருத்தம்” என்று உயரிழந்த மாணவியின் தந்தை ரவிக்குமார் கூறியுள்ளார். தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியா கடந்த நவம்பர் 15-ம் தேதி உயிரிழந்தார். இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read more

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜர்..!!

திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 4 பேர் ஆஜராகினர். மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.