கன்னியாகுமரி: ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி எம்ஜிஆர் நகர் தொகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா(48). இவர் நேற்று காலை குளிப்பதற்காக ஹீட்டரை ஆன் செய்துள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பது பார்ப்பதற்காக கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிரேமாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more

ஓரங்கட்டப்படுகிறாரா ரொனால்டோ?.. போர்ச்சுகலுக்கு கிடைத்த புதிய பொக்கிஷம்!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவை களம் இறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் … Read more

புயல் எச்சரிக்கை | புதுச்சேரியில் 238 முகாம்கள் தயார் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, நாள்தோறும் 75 ஆயிரம் பேருக்கு உணவு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த … Read more

mandous cyclone update:புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என கணிப்பு!

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் இது வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் எனவும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் விளைவாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக … Read more

சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை

சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

திருப்பூர் : ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்திய நபர் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் நியாயவிலைக் கடை அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி, சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் காங்கேயம் அருகில் உள்ள லட்சுமி நகர் இரண்டாவது வீதியில் சந்தேகத்தின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் … Read more

கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் 3 பேர் அதிரடியாக கைது

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. … Read more

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்காக 30 ஆண்டுகள் குத்தகைக்கு கோயில் நிலம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் … Read more

டிசம்பர் 8, 9 பள்ளிகள் விடுமுறை? – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்தது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more