கனமழை எச்சரிக்கை | கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் 

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக அவரச கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள … Read more

வெறும் 3% வாக்குகளை வைத்து கொண்டு… சீமானை சீண்டிய மாணிக்கம் தாகூர்!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். … Read more

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையால் பக்தர்கள் அவதி!

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் பஞ்சினும் மெலடியாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் இங்கு சனீஸ்வரன் பொங்கு சனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆலயத்தின் குபேர மூலையில் கையில் ஏர் கலப்பையுடன் சனீஸ்வரன் தனி சன்னதியாக காட்சியளிக்கிறார். அவருக்கு நேர் எதிரே காலபைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும். நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் சனீஸ்வரன் வழிபட்டு சனி தோஷம் நீங்க பெற்றாலும், இந்த திருக்கொள்ளிக்காடு தளத்தில் … Read more

அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மேநீர் தேக்கத்தொட்டி: புதிதாக அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியம் மருதவல்லிபாளையம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மருதவல்லிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மேநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு … Read more

ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 9 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது!

செம்மரக்கட்டைகளை கடத்தியதாக ஒன்பது தமிழர்களை கைது செய்துள்ள ஆந்திர போலீஸார், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக டாடா சுமோ வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் தமிழக எல்லையை ஒட்டி உள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில் செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி உத்தரவின்படி, வி.கோட்டா எஸ்.எஸ்.ராம்புபால் தலைமையிலான போலீஸார், … Read more

சென்னை பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரம்; விசாரணைக்கு குழு அமைத்து உயர் கல்வித்துறை உத்தரவு

சென்னை பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறிய விவகாரம்; விசாரணைக்கு குழு அமைத்து உயர் கல்வித்துறை உத்தரவு Source link

#பெரம்பலூர் : குறைந்த விலையில் நகை.. ஆசைகாட்டி அபேஸ் செய்த டீச்சர்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற 45 வயது நபர் சேலம் மாவட்ட காவல்துறை ஆய்வாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.  அந்த புகார் மனுவில், “தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னை சியாமளா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக ஆசை காட்டி என்னிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பித் தரவும் இல்லாமல், நகை வாங்கி தரவும் இல்லாமல் … Read more

ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது. பக்தர்கள் உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 வயது சிறுவன் மணிகண்டன் உயிரிழந்தான்.இந்த விபத்தில் 18 பேர் யமடைந்தனர். காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. பயணித்த பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை நோக்கி சென்று கொண்டிருந்த  இருசக்கர வாகனத்தின் மீது முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி  சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்திக், அன்பு, போதும் பொண்ணு ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை … Read more

7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு; மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை வரவேற்கிறேன்: நாராயணசாமி

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி … Read more