அண்ணாமலையை கடிந்துகொண்ட அமித் ஷா… பறிபோகும் தலைவர் பதவி?

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வந்த உள்துறை அமித் ஷா சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்த ஆலோசனை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது என்று சொல்லப்படுகிறது. அப்போது, அமித் ஷா திமுக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து ஒவ்வொரு நாளும் குறைகளை ஊடக வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்டை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளாராம். மேலும், அண்ணாமலையை அமித் ஷா கடிந்து … Read more

7 பேர் விடுதலை… மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

தூத்துக்குடி மாநகர பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார துறை நடவடிக்கை

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல இடங்களிலும் இரவில் மக்கள் தூங்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து  மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல சுகாதாரத் துறை மூலம் மாநகராட்சி பகுதி முழுவதும் சுழற்சி முறையில்  பணியாளர்களை கொண்டு கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.       இதுகுறித்து மாநகராட்சி எதிர்கட்சி கொறாடா வக்கீல் மந்திரமூர்த்தி … Read more

கூட்டுறவுத்துறை செயல்பாடு எப்படி?; அமைச்சர்கள் ஐ.பெரியசாமி Vs பிடிஆர் இடையே கருத்து மோதல்?

கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் நிதியமைச்சராக தனக்கு திருப்தியில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவில் கூட்டறவுத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசியிருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறையில் விரைவில் … Read more

திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி Source link

பிரியா மரண வழக்கு | மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்! அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

சென்னை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை கைது செய்யும் முயற்சியில் மூன்று தடைப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துருவிஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் … Read more

சிறையில் அமைச்சருக்கு மசாஜ்… வைரல் வீடியோ!!

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஹவாலா பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் … Read more

வீட்டு கொட்டாயில் தங்கியுள்ள முதியவருக்கு உணவு தர மறுத்ததோடு, கம்பால் அடித்து துன்புறுத்தும் உறவுக்கார..!

செங்கல்பட்டு அருகே வீட்டு கொட்டகையில் தங்கியிருந்த உறவுக்கார முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  குப்பன் என்பவரின் வீட்டு கொட்டாயில்   உறவுக்காரரான  80 வயதாகும் சொக்கலிங்கம் தங்கியுள்ளார். கவனிக்க யாருமில்லாத அவரை, குப்பனும் அவரது மகள் சிவகாமி மற்றும் பேரன் சூரியாவும் உணவு தரமறுத்ததோடு,குச்சி மற்றும் கம்பால் அடித்துள்ளனர்.  இதில் காயமடைந்த சொக்கலிங்கம் காயங்களுடன் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து விசாரணை நடத்தி சூர்யாவை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் எழுதவில்லை. தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (நவ.19) நடைபெற்றது. காலை 9.30 முதல் … Read more

Varisu: வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி.. கொளுத்திப்போடும் மாஜி அமைச்சர்..

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொங்கலுக்கு சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக இருப்பதால் விஜய் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதேநாளில் அஜித்தின் … Read more