கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கனமழையும், நவம்பர் 21 மற்றும் நவ.22 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், … Read more

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். … Read more

பல டிசைன்களில் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் – ஆலோசனையில் முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டமானது 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை … Read more

சிதிலமடைந்த நிலையில் காணப்படும்; மேலப்பாவூர் சிற்றாறு கால்வாயில் புதிய பாலம் கட்டப்படுமா?

பாவூர்சத்திரம்:  பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் மேற்கு பகுதியில் மேலப்பாவூர் கால்வாய் பத்து அமைந்துள்ளது. இங்கு குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன் சிற்றாறு கால்வாயில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த குறுகிய பாலத்தின் வழியாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு விவசாய இடுப்பொருட்கள் கொண்டு சென்றனர். இந்த பாலம் கட்டி பல ஆண்டுகளாக ஆகியதால் பாலத்தின் தடுப்பு சுவர் இன்றி … Read more

வீடுகட்ட வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

கோபிசெட்டிபாளையம்; வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி, இவர் கவுந்தப்பாடியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா (21) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் ராஜா டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருமூர்த்தி கடந்த சில … Read more

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது – இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் அடுத்த 3 நாட்களுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி வரக்கூடும் என்பதால், இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் … Read more

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாவது எப்போது? – ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனம் ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான … Read more

தமிழக அரசு அசத்தல் பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.2500 வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு, தைப் பொங்கலுக்கு ரொக்கப் … Read more

சென்னையில் சோகம்… கடற்படை பேருந்து விபத்தில் சிக்கி கர்ப்பிணி, சிசுவோடு உயிரிழப்பு!

திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் சிவா ரெட்டி (27). இவரது மனைவி லலிதா (22) எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர்களுக்கு, திருமணமாகி ஓராண்டு ஆகிறது.  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள INS அடையார் கடற்படை தளத்தில் சிவா ரெட்டி பணியாற்றி வருகிறார்.  கர்ப்பிணி மனைவி லலிதாவுடன், சிவா ரெட்டி தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை 6 மணிக்கு, மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்துவிட்டு  இரவு 8.30 … Read more