முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘குட்டி காவலர்’ திட்டம் – உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் சாதனை

சென்னை: தமிழக அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, இன்று (அக்.12) தொடங்கி வைத்தார். ‘இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். சாலைப் பாதுகாப்பு குறித்த … Read more

இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய மனு: தமிழக அரசுக்கு உத்தரவு!

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 – 21ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ … Read more

நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!

Organic Farmer: நோய்தொற்று காலத்திற்கு பிறகு உணவு மற்றும் விவசாயத்தின் அருமையை பலரும் உணர்கின்றனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தை இன்றைய  தலைமுறையினர் உணர்ந்து வருகின்றனர். இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் விவசாயி பொன்முத்து. பல்லடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெரடமுத்தூர் கிராமம். அங்கு கடந்த ஏழு வருடங்களாக 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் … Read more

பென்னகர் ஊராட்சியில் திடீர் ஆய்வு தூய்மையற்ற முறையில் அங்கன்வாடி மையம்-ஆசிரியரை கண்டித்த ஆட்சியர்

மேல்மலையனூர் : மருத்துவம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி  மையத்தை தூய்மையற்ற முறையில் வைத்திருந்த  ஆசிரியரை ஆட்சியர் மோகன் கண்டித்தார். விழுப்புரம் மாவட்டம் பென்னகர்  கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும்  பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  ஊதிய விவரங்கள் குறித்தும் பென்னகர் ஊராட்சியில்  மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் மற்றும்  பொதுமக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். … Read more

பள்ளிக்கு தாமதமானதால் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் நடந்து செல்லும் மாணவ மாணவியர்!

பள்ளிக்கு தாமதமாகிவிட்டதாகக் கூறி அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் நடந்து சென்று, பள்ளி சிறுவர்கள் தண்டவாளத்து கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் விரைவு ரயில் திடீரென சிக்னல் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது அவ்வழியாக … Read more

ஐபோன் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிசம்பரில் 5G அப்டேட் – ஆப்பிள் அறிவிப்பு

ஐபோன் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்! டிசம்பரில் 5G அப்டேட் – ஆப்பிள் அறிவிப்பு Source link

உள்ளாடைக்கு 18.ரூ கூடுதலாக வசூல்.. 10 ஆண்டாக நடந்த பஞ்சாயத்து.. இறுதியில் கஸ்டமருக்கு கிடைத்த நீதி.!

ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்ற வழக்கில் 10 ஆண்டு கழித்து 2 லட்சத்து 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட் கடையில் ஓசூரை சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற நபர் கடந்த 2013இல் 278 ரூபாய்க்கு ஒரு உள்ளாடை வாங்கியுள்ளார். அந்த ஆடையின் விலையை பரிசோதித்த போது அதில் MRP.260 ரூபாய் மட்டுமே போடப்பட்டிருந்தது.  தன்னிடம் கூடுதலாக 18 ரூபாய் வசூல் செய்து இருப்பது தெரியவந்தது. … Read more

கோவையில் குட்டிக் காவலர்.. தொடங்கி வைத்தார் முதல்வர்..!

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக சாலை விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘உயிர் அமைப்பு’, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டிக் காவலர்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை அரசுடன் இணைந்து தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து, “தலைக்கவசம், சீட் பெல்ட் … Read more

குடிபோதையில் வழிவிட மறுத்ததால் கூலித்தொழிலாளியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த இளைஞர்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கோபாலபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். சந்தேகத்தின்பேரில் மல்லியகரையைச் சேர்ந்த பால் விற்பனையாளர் பூவரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இரவு, குடிபோதையில் வழிவிட மறுத்து முருகேசன் தகராறு செய்ததால், மிகப்பெரிய கல்லை எடுத்து, அவரது தலையில் போட்டதாக, பூவரசன் அப்போது வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பூவரசன் கைது செய்யப்பட்டார். Source link

“லீவ் மட்டும் விடுங்க மேடம், உங்களுக்கு…” – ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி, மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிறன்று பெய்த மழையைத் தொடர்ந்து, அடுத்தநாள் திங்கள்கிழமைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு, அவரது இன்ஸ்டாகிராமில் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டாவில் வந்த மாணவர்களின் விடுமுறை கோரிக்கைகளை … Read more