கம்பம் அருகே சுருளி அருவியில் குடிமகன்களால் தொல்லை: போலீசார் கண்காணிக்க கோரிக்கை
கம்பம்: கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குடிமகன்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு … Read more