தூக்கமற்ற இரவுகள்: ஸ்டாலின் பேச்சால் அமைச்சர்கள் கலக்கம்!

உட்கட்சித் தேர்தலின் இறுதிகட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வானார். அதன்பின்னர் அவர் பேசுகையில், “நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று தெரிவித்த திமுக தலைவர் , “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் … Read more

எமனாய் வந்த நாய்; தலை நசுங்கி இளைஞர் பரிதாப மரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த காந்தியின் மகன் ராம்குமார் (35). இவர் தனது மனைவியின்  ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆவரேந்தல் கிராமத்தில் இருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தனது இருசக்கர ஸ்கூட்டி வாகனத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கீழக் கோட்டை மிளகாய் கிடங்கு அருகில் அவர் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இரு சக்கர வாகனம் … Read more

பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் மலையை சுற்றி கிரிவலம் சுற்ற ஏதுவாக சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினந்ேதாறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவு வருவர். மேலும் இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அந்த … Read more

“உங்கள் வழிநடத்தலை இந்த நாடு எதிர்பார்க்கிறது"- பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கூறிய கனிமொழி

“மு.க.ஸ்டாலினின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பாக்கிறது” என்று திமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். திமுக-வின் 15வது பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி, பொதுக்குழு மேடையில் பேசுகையில், “1949-ம் ஆண்டில் கழகத்தை தொடங்கிய போது அண்ணா அவர்கள் இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்று உரைத்தார். அதே போல் சுயமரியாதை திருமணச்சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா அவர்கள் வழியில், அவருக்கு பிறகு … Read more

திருநெல்வேலி || 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை.!

திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாளன்குளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கொம்பதாஸ் (14) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொம்பதாஸ் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை ஒரு மணி அளவில் கொம்பதாஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்தனர். இதைத்தொடர்ந்து … Read more

ஸ்டாலின் மீண்டும் தி.மு.க தலைவராக தேர்வு: கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி

ஸ்டாலின் மீண்டும் தி.மு.க தலைவராக தேர்வு: கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி Source link

சுனாமியில் மாயமான மனைவி.. 9 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவன்..!

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சுனாமி ஏற்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது ஜப்பானில் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம். மேலும், இந்தப் பேரழிவில் 19,759 பேர் இறந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜப்பானில் யசுவோ தகமாட்சு-யூகோ தகமாட்சு தம்பதியர் வசித்து வந்தனர். சுனாமியின்போது தம்பதி வசித்து வந்த ஒனாகவா பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது யூகோ காணமல் போனதாக … Read more

இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.!

4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று., கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.! சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் … Read more

ஹெச்.ராஜா வீட்டில் நாய் கொல்லப்பட்டதா?

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் ‘எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறிபிடித்து மாடு, கன்றுகளை கடிக்கத் தொடங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் கல், மூங்கிலால் நாய் தலையில் அடித்தார். இதில் நாய் இறந்தது. இது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது?.’ என்று கடந்த செப். 21-ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து நாயைக் கொடூரமான முறையில் கொலை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் பயணித்தவர் அக்கட்சியின் முன்னாள் எம்.பி., மைத்ரேயன். அணிகள் இணைப்புக்கு பின்னர், பெரிதாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். மேலும், மைத்ரேயனுக்கான முக்கியத்துவத்தை ஓபிஎஸ் கொடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால், அவ்வப்போது தனது வருதத்தை மறைமுகமாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டும் வந்தார். இந்த நிலையில், அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளாது. … Read more