ரோடு போட்ட ரசீது மட்டுமே உள்ளது! கரூரில் போடாத சாலைக்கு ரூ.5 கோடிக்கு பில்! 6 மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை!

சுமார் 111 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 டெண்டர் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது! கரூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு இருந்தது. சுமார் 36 டெண்டர்கள் விடப்பட்டதில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு 20 டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் 111 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்நிலையில் அறப்போர் இயக்கம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை வைத்து சாலை போடாமல் ரூ.5 கோடி ஒப்பந்ததாரருக்கு … Read more

நடன அழகிகளுக்கு சரமாரி கத்திக்குத்து!!

அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேளிக்கை விடுதிகள், பார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிளார்க் நகர வீதியில் நடன அழகிகள் கவர்ச்சி நடனமாடும் மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் நடன அழகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அவர் கையில் கத்தியுடன் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதற்கு மறுத்துவிட்டார். அதை மீறி நடன … Read more

ரூ.1,977 கோடியாக உயர்ந்த திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் தரவில்லை – மத்திய அரசால் தாமதமாகிறதா மதுரை எய்ம்ஸ்?

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தில் ரூ.1,977 கோடியாக உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததாலேயே கட்டுமானப் பணிக்கு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குபிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை: வெளியானது அரசாணை- என்னென்ன எச்சரிக்கைகள்?

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பல தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கினார். இது குறித்த அரசாணையும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் … Read more

கொலை வழக்கில் தொடர்பு ராக்கெட் ராஜா அதிரடி கைது; திருவனந்தபுரத்தில் தனிப்படை சுற்றிவளைப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே இளைஞர் கொலை வழக்கு ெதாடர்பாக, ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமித்துரை (23). இவர் கடந்த ஜூலை 28ம்தேதி நள்ளிரவு வீட்டின் முன்புநிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது. நாங்குநேரி போலீசார் நடத்திய விசாரணையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏர்வாடி … Read more

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? – தேர்வு செய்யும் பணி தீவிரம்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் பதவி ஓய்வுப் பெறவுள்ளதால், அடுத்த நீதிபதியை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்று பரிந்துரை செய்யுமாறு யு.யு.லலித்திடம் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் 8- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவர் சந்திரசூட் இருப்பதால் அவரது பெயரை … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை?

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை? Source link

பட்டாசு கொண்டு செல்லத் தடை – மீறினால் 5 ஆண்டு சிறை!!

பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதே போல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான … Read more

பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜா கைது..!

நெல்லை மாவட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜாவை  கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில்  கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது வீட்டினருகே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் சரணடைந்த நிலையில் , விசாரணையில் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பிச்செல்லவிருப்பதாக வந்த தகவலையடுத்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். இம்மாதம் 20ஆம் … Read more