பிரியாணி விருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு.! 6 பேரில் ஒருவர் பலி.!

திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் கடந்த 5ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்வில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவு ஒவ்வாமையினால் … Read more

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் உயர்கல்வி கற்போர் விகிதம் அதிகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

கோவை: தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களின் சராசரி விகிதத்தைவிட, தமிழகத்தில் இரண்டுமடங்கு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார். கோவையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேறிய நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும்மாணவர்களின் சராசரி எண்ணிக்கையைவிட, … Read more

கழிப்பறை இல்லாததே பெண் கல்விக்கு முக்கியத் தடை: தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு

கோவை: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார். அங்கு நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழிசை செளந்தர்ராஜன், ‘பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நிறுவனர் அவிநாசிலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு … Read more

ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே CGL தேர்வு நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..!!

மதுரை: ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே CGL தேர்வு நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியில் கேள்வித் தாள் உண்டு தமிழில் இல்லை, ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி எனவும் இந்திக்கான தனி உரிமையை மறுப்போம், இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட் செய்துள்ளார்.

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 37 மாவட்டங்களுக்கும் தனி அலுவலர்கள் நியமனம்

அரசுத் துறை திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சிறப்புதிட்ட செயலாக்கத் துறை சார்பில்37 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கள தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணை: அரசின் கொள்கை அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட துறைகளின் தரவுகளைப் பெற்று கண்காணிக்கும் பணியை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் செயல்பாட்டு அறிக்கையை தயாரித்து, அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்துதல், உயர்நிலை சீராய்வு கூட்டங்களுக்கான பகுப்பாய்வு … Read more

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு மேட்ச்சாகும் வடிவேலு டயலாக்: அதிமுக தொண்டர்கள் ரியாக்‌ஷன் என்ன?

‘உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க, இந்த ரெண்டு தெய்வமும் மாறி மாறி உண்மையைச் சொல்லிகிட்டு இருக்கு’ என்று வடிவேலுவின் காமெடி வசனத்துக்கு பக்காவாக பொருந்திப் போகிறார்கள் இபிஎஸ், தரப்பினர். ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்து தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இது தான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் … Read more

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி… கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார்.  திருவாரூர் மாவட்டம் மெயின் ரோடு திருவாசல்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் மாரியம்மாளுக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தக்காளிசாதம், தயிர் சாதம், புளி சாதம், பிரிஞ்சி சாதம், கருவேப்பிலை சாதம் … Read more