நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து, 6 லட்சம் டன்கள் … Read more

பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால் சாத்தூரில் சரிந்த பேனா நிப்புத் தொழில்: ஒன்றிய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

சாத்தூர்: சாத்தூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பேனா நிப்புத் தொழில், பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் தற்போது வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் மானியக் கடன்கள் வழங்கி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முக்கியத் தொழிலாக சேவு தயாரித்தல், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் ஆகியவை உள்ளன. இதுதவிர பேனாவுக்கு நிப்புத் தயாரிக்கும் தொழிலும் ஒரு காலத்தில் கொடி … Read more

புதுக்கோட்டை: மதுபோதையில் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்ட கும்பல்கள்

புதுக்கோட்டையில் மது போதையில் இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கிக் கொள்ளும் பகிரங்க காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் தனியாருக்குச் சொந்தமான மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுவதால் இங்கு அதிக அளவில் மது பிரியர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இங்கு மது அருந்தி விட்டு வெளியே வந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக … Read more

தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாக தொடர்ந்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் விடுதலை: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 

சென்னை: லஞ்ச வழக்கில் கைதான மத்திய புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் சி.ராஜன், அவரது வாகன ஓட்டுநர் முருகேசன் ஆகியோரை விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் சென்னை பிராந்திய கூடுதல் இயக்குநராக பதவி வகித்த சி.ராஜன் தலைமையிலான அதி காரிகள் குழு, கப்பல் மற்றும் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தது. வங்கிக் கணக்கு … Read more

விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு | விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் பெற முதல்வர் அலுவலகத்துக்கு இன்னும் சமர்ப்பிக்கவில்லை: ஆர்டிஐ அதிர்ச்சி

சென்னை: விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்துக்காக, விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறைக்கு அனுப்பி 10 மாதமாகும் நிலையில், இதுவரை தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு ஒப்புதல் பெற சமர்ப்பிக்கவில்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது. எனவே, தமிழக முதல்வருக்கு விரைவாக அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் … Read more

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்: உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் அக்டோபர் 3ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் … Read more

சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 5.7 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.7 கிலோ தங்கம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் … Read more

“தினமும் 15-16 மணி நேரம் வேலை, மனரீதியாக சித்திரவதை” – மியான்மரில் சந்தித்த வேதனைகளை பகிரும் தமிழர்

சென்னை: மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் … Read more

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை..இந்து முன்னணி நிர்வாகி கைது.!

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த இந்திய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தினமும் கஞ்சா குட்கா மற்றும் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காவல்துறைய கைப்பற்றி விற்பனை … Read more