தேனி || போடி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தெற்கு இரயில்வே அதிகாரி!

போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை! நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. நிதி ஆயோக் குழுவானது இந்திய ரயில்வே வரைபடத்தில் இல்லாத மாவட்டங்களை கண்டறிந்து இந்திய ரயில்வே பாதையுடன் இணைக்கும் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது. மேலும் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதையை … Read more

மீண்டும் ஆரம்பமானது இபிஎஸ் – ஓபிஎஸ் போர்..!! இந்த முறை தேவர் சிலைக்கு..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ல் பசும்பொன் தேவர் சிலைக்கு ரூ.3.17 கோடி மதிப்பில் 13 கிலோ எடை உள்ள தங்க கவசம் தந்தார். தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு ஆண்டுதோறும் குருபூஜையின் போது அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து பூஜை முடிந்த பின் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம். இதை அடுத்து இந்த ஆண்டுக்கான முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழா … Read more

தொழில் துறையினருடன் கலந்துரையாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தேசிய திறன் தகுதிக்கான கட்டமைப்பின் கீழ் திறன் சார்ந்த கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் உள்ளன. அதன்படி, மதிப்பெண் வகைப்பாட்டுடன் தொழில் சார்ந்த கல்வி வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், மேற்கூறிய கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி, திறன் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதை … Read more

புதுச்சேரி பெண் மருத்துவருக்கு கலந்தாய்வில் அனுமதி: நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்ததால், பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேமா, மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி விண்ணப்பித்தார். ஆனால், தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் … Read more

ஐடி துறையில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு!

ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புதுடில்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு (02.10.2022 & 03.10.2022) நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று (03.10.2022) பங்கேற்று உரையாற்றினார். அத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தலும் உரையாற்றினார். அதன் பின்பு அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களாக … Read more

ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் விபத்தில் பலி.!

தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் நந்தகுமார் (21). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நந்தகுமார் சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து நேற்று ஏரிகளில் நீர் நிரம்பி வருவதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் … Read more

அவன் அசைவற்று கிடக்கிறான்.. அவனோடு சேர்த்து எங்களையும் கருணை கொலை செஞ்சிடுங்க..! ஒரு தாயின் கண்ணீர் மனு..

நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயபால் – சாந்தா தம்பதியரின் 29 வயது மகன் சேதுபதி..! பிடெக் முடித்து நாகர்கோவில் உள்ள ஆட்டோ மொபைல் தொழிசாலையில் பணிபுரிந்து வந்த சேதுபதி 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி பணியிடத்தில் இருந்தபோது திடீரென்று சேதுபதி மயங்கி விழுந்துள்ளார். அரசு மருத்துவமனை கைவிட்டதால் திருவனந்தபுரம், குலசேகரம் தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களை கொட்டி சிகிச்சை அளித்தனர். சொந்தமாக இருந்த ஒற்றை வீட்டையும் விற்று தன் மகனுக்காக சிகிச்சை … Read more

ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது: இணை அமைச்சர் பேட்டி

மதுரை: ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருவதாக ஒன்றிய இணை அமைச்சர் பக்வந்த் குபா தெரிவித்தார். ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பக்வந்த் குபா, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக  மதுரையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஒன்றிய அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்து அமைச்சர் … Read more