விவசாயி தோட்டத்து மின் இணைப்பை துண்டித்த திமுக கவுன்சிலர்.. பாதை பஞ்சாயத்தில் ஆவேசம்..!

10 அடி நிலத்தை பாதைக்காக தானமாக எழுதித்தர மறுத்த விவசாயி ஒருவரின் மாந்தோப்புக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை திமுக கவுன்சிலர் மின்கம்பத்தில் ஏறி துண்டித்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்துள்ளது… கிருஷ்ணகிரி மாவட்டம் பந்தரவள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவர் தனக்கு சொந்தமான மாந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பக்கத்து நிலத்தின் விவசாயி கண்ணன் என்பவருக்கு பாதைக்காக 10 அடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் … Read more

இந்தியாவில் முதல்முறை | தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திண்டுக்கல்: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அஸ்வகந்தா பயிர் சாகுபடி திட்டம் துவக்க விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். மாநில மூலிகை தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சு.கணேசன் வரவேற்றார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பேசினர். அஸ்வகந்தா பயிர் … Read more

ப்ரீ ஃபயர் விளையாட்டுக்கு அடிமையான சிறுமி மாயம் தடையான விளையாட்டுகள் கிடைப்பதை தடுப்பது எப்படி? ஆன்லைன் ஆட்டங்களுக்கு கடிவாளம் அவசியம்; ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதை தடுப்பது எப்படி என்பது குறித்து, ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை செய்கிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு … Read more

எடப்பாடி: ஆதரவற்ற குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் காயங்களுடன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னமுத்தூரில் இயங்கி வரும் பிருந்தா என்ற ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில், 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் எடப்பாடி மற்றும் ரெட்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக … Read more

இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதி நூலகம் : கோவையில் புதிய முயற்சி

இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதி நூலகம் : கோவையில் புதிய முயற்சி Source link

தடைக்கு பிறகும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து விளையாடப்படுவதை தடுக்க விபிஎன் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பிரிஃபயர் விளையாட்டுக்கு அடிமையாகி மாயமான இளம் பெண் ஒருவரை மீட்கக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் பலர் பிரிஃபயர் போல் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தங்களின் குழந்தைகளும் அடிமையாகியிருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர். … Read more

தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார். தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் … Read more

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சிறுமியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளி செல்ல பாதை அமைப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அருகே பள்ளிக்கு செல்ல பாதை அமைக்க உதவி கேட்ட சிறுமிக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி வண்டிக்காரன் காட்டுவளவு பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, தனியார் பட்டா நிலத்தில் ஒத்தையடி பாதையில் மட்டுமே சென்று வர முடியும். உழவு செய்து விட்டால், அப்பாதையில் நடந்து செல்ல முடியாது. இதனால் பள்ளி செல்லும் சிறுமியர் கடும் பாதிப்புக்கு … Read more

சென்னை: நண்பர்களிடம் பெட் கட்டி பெண்ணைத் தொட வீட்டிற்குள் புகுந்தவருக்கு தர்ம அடி.!

சென்னை புழல் அருகே பெண் ஒருவரை தொடுவதற்காக பெட் கட்டியதாக மது போதையில், வீடு ஒன்றில் புகுந்த நபரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை அடுத்த புழல் புத்தகரம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபரை பொது மக்கள் பிடித்து அடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீ யார் எதற்கு வந்தாய் என கேட்பதற்கு, தமது நண்பர்கள் பெண் ஒருவரை தொட … Read more