ஐயப்பன், லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் பள்ளி | தமிழகத்தின் நல்லாசிரியர்களில் ஒருவர்

திருப்பூர்: கரோனா கால பொது முடக்கத்தின் போதும் தொய்வின்றி மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி புகட்டிய திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுடன், திருப்பூர் திரும்பி உள்ளார் ஆசிரியர் ஐயப்பன் (37). திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஈசல்தட்டு செட்டில்மன்ட் பகுதியை சேர்ந்த லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியர். திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் வசித்தாலும், … Read more

ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம்..! – எந்த வழித்தடத்தில் பயணிக்கிறார் தெரியுமா..?

தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது நாள் நடை பயணமாக நாளை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து துவங்கி நாகர்கோயிலில் நிறைவு செய்கிறார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ … Read more

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

குமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,570 கி.மீ, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதேசங்கள் வழியாக பாரத் ஜோடோ யாத்ரா என்ற 150 நாட்கள் பாத யாத்திரையில் 3,570 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

70 ஆண்டுகள்!ஏராளமான கால்பந்தாட்ட வீரர்கள்! விளையாட்டில் கவனம் ஈர்க்கும் பள்ளத்தூர் கிராமம்

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய பெருமை உண்டு. அந்தப் பெருமை தான் அந்த ஊரின் அடையாளமாக விளங்கும். அதுபோல சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதி என்று அழைக்கப்படும் பள்ளத்தூர் கிராமம் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் கிராமமாக கடந்த 70 வருடங்களாக திகழ்ந்து வருகிறது. 5 வயதில் கால்பந்தாட்டம் ஆட கற்றுக்கொடுக்கும் பள்ளத்தூர் கிராம மக்களின் விளையாட்டு ஆர்வம் இந்த தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பள்ளத்தூர். … Read more

தமிழகத்துடன் என் உறவு ஆழமானது: கன்னியாகுமரியில் நடை பயணம் தொடங்கிய ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இன்று மாலை தொடங்கிய இந்த நடைபயணத்திற்கு முன்பாக பேசிய ராகுல்காந்தி கூறுகையில், 3 சமுத்திரமும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. தமிழகத்துடனான எனது உறவு ஆழமானது. நான் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும், மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் இருக்கிறேன். தற்போதைய சூழலில் தேசத்தை ஒற்றுமை படுத்தக்கூடடிய அவசியம் எழுத்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். … Read more

கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்.. காவல்துறையினர் விசாரணை..!

கால்வாயில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் செல்லும் கால்வாயில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்45 வயது உள்ள அந்த பெண் யார்? அவர் … Read more

எஸ்.பி.வேலுமணி வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்: உயர் நீதிமன்றம்

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் … Read more

தமிழக அரசு செம ஷாக்; உயர்நீதிமன்றம் திடீர் அதிரடி!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கும் டெண்டர் வழங்கப்பட்டது. இதில், முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் … Read more

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம் ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம், ஆந்திர மார்க்கமாக செல்லும் பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வேலூர் மாநகரின் மத்தியில் கோட்டையின் எதிரே தியாகி உபைதுல்லா வேலூர் பழைய பஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கும், வாகன நெரிசலுக்கும் இந்த  இடம் ஏற்றதாக இல்லை என்பதால் புதிய பஸ் நிலையம் அமைக்க செல்லியம்மன் கோயில் … Read more

“நாங்கள் இதை குடிச்சிட்டு சாகணுமா”.. மது பாட்டிலில் மிதந்த பொருளால் கொந்தளித்த குடிமகன்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் “குவாட்டர் பாட்டிலில் தூசியா? தீப்பற்றி எரியும் பார்” என ஆவேசமாக வாலிபர் போதையில் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் குடிப்பதற்காக மது வாங்கியுள்ளனர். இரண்டு குவாட்டர் பாட்டில்களை அவர்கள் வாங்கிய நிலையில் அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகள் … Read more