சேலம்.! பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் வெங்கடேசன்(55). இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று இரவு வெங்கடேசன் வீட்டில் பாய் போட்டு, அதில் படுத்திருந்தார். அப்பொழுது திடீரென மின்சாரம் தடைபட்டதால், எழுந்து வெளியே வர முயன்ற போது எதிர்பாராத விதமாக பாய் தடுக்கி கீழே விழுந்துள்ளார். … Read more

கோவில் விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்பதை எதிர்த்து வழக்கு : மாற்று மதத்தினர் பங்கேற்கக் கூடாது என விதிகள் இல்லை எனக் கூறித் தள்ளுபடி..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. சோமன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்தது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என விதிகள் எதுவும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். ஏசுதாஸ் பாடிய பாடல்கள் இந்துக் கோவில்களில் ஒலிக்கப்படுவதையும், வேளாங்கண்ணி … Read more

இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் மெரைன் போலீஸ் ரோந்து படகு நிறுத்தப்படுமா?

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் மெரைன் போலீஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட் டத்தில் மெரைன் போலீஸாருக்கு மண்டபம், தேவிபட்டினம், தொண்டி ஆகிய இடங்களில் மூன்று காவல் நிலையங்களும், ராமேசுவரம், புதுமடம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் துணைக் காவல் நிலையங்களும் உள்ளன. கடலில் ரோந்து மற்றும் மீட்புப் பணிக்காக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்காக பிரேத்யேகமான அதிவேகப் படகுகள் உள்ளன. மேலும் மீட்புப் பணிக்காக மெரைன் போலீஸாருக்கு … Read more

ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் 6ஆம் தேதி பட்டியலிடப்பட உள்ளது.  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு அறிவித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை … Read more

தினமும் 4 மிளகு: இப்படி சாப்பிட்டுப் பாருங்க; இவ்ளோ நன்மை இருக்கு!

நமது சமையலறையில் இருக்கும் பல உணவு பொருட்களே, நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்கைக்கு கொண்டு சென்றுவிடும். ஆனால் அதன் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை.  அப்படி நாம்  குறைத்து மதிப்பிடம்  உணவுதான் மிளகு. இதில் இருக்கும் நம்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம். மிகுந்த காரத்தன்மை கொண்ட மிளகு, வாதம் தொடர்பான நோய்களை விரட்டக்கூடியது.  காய்ச்சல், இருமல், மூட்டுவலி, சுவையுணர்வின்மை போன்ற பிரச்னைகளை மிளகு தீர்த்து வைக்கும். புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தின் தீவிரத்தைக் குறைக்கும். செரிமானத்தை முறைப்படுத்தும். எந்த மருந்தை சாப்பிட்டாலும் … Read more

அதிமுகவில் திடீர் திருப்பம்.. ஓபிஎஸ், இபிஎஸ்சை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போகும் முன்னாள் அமைச்சர்.? பரபரப்பு பேட்டி.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் … Read more

மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 இந்திய மீனவர்களையும், அவர்களது படகினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டது அவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை வரும் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார் கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ … Read more

`TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு NO; இல்லம் தேடி கல்வி பணியாளிகளுக்கு YES’- தஞ்சையில் அவலம்

தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வழங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே மேலாண்மை குழு சார்பில் தற்காலிகமாக நிரப்பி கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணியிடம் … Read more

நடிகராக முத்திரை பதித்த மாதவன்… இயக்குநராக ஜெயித்தாரா? ராக்கெட்ரி விமர்சனம்

Rocketry The Nambi Effect Movie Review In Tamil : இந்தியாவின் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட தேசதுரோப பழியில் இருந்து எப்படி மீண்டு வந்தார் அதன்பிறகு அவர் செய்த சாதனைகள் என்ன என்பதை விவரிக்கும் படம் தான் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். நமக்கெல்லாம் சாக்லேட் பாயாக அறிமுகமாகி பின்னளில் ஆக்ஷன் ஹீரோவாக பரிட்சயமாக நடிகர் மாதவன் இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்தள்ளார் … Read more