போதிய சாக்குப்பைகள் இல்லாததால் தாமதமாகும் கொள்முதல்! தவிக்கும் விருத்தாச்சலம் விவசாயிகள்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய அளவு சாக்குப்பைகள் கையிருப்பு இல்லாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2 ஆயிரம் சாக்குப்பைகளுக்கு 700 சாக்குப்பைகள் தான் உபயோகிக்கும் நிலையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், உளுந்து, மணிலா, கம்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தானியங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கம்பு வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளின் சாக்கு மூட்டையில் இருந்து … Read more