குவைத்தில் மரணம் அடைந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வர வாய்ப்பு
சென்னை: குவைத்தில் மரணம் அடைந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாடு சென்று பணிபுரிய முடிவு செய்து கடந்த 3-ம் தேதி குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி குவைத்தில் முத்துக்குமரன் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துக்குமரணம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறிய கூத்தாநல்லூர் வர்த்தக … Read more