8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. Source link