தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 35-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ த.வேலு, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா … Read more