எடப்பாடி பழனிசாமிக்கு என்ன ஆச்சு? துரைமுருகன் எழுப்பும் கேள்வி!
அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கைக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலறிக்கை கொடுத்துள்ளார். துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் … Read more