மெரினாவுக்கு போனால் இலவச வைஃபை: சென்னை மாநகராட்சி அசத்தல்..!

சென்னை மெரினா கடற்கரையில், பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச இணைய சேவை (வைஃபை) வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி … Read more

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப் பதிவு: பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப் பதிவு விபரங்களை தாக்கல் செய்ய பதிவுத் துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சியில் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது. இந்த முறைகேடான பத்திரப் பதிவுகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப் பதிவு செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு வாபஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து அதிமுக கிளை செயலாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக கிளை செயலாளர் தணிக்காசலம் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சண்முகம் மற்றும் தணிக்காச்சலம் தொடர்ந்த உரிமையியல் வழக்குகளில் இடைக்கால உத்தரவு ஏதும் இல்லாமல் தள்ளி … Read more

சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

யானையின் வைரல் வீடியோ: யானையின் வைரல் வீடியோ: பலவிதமான அற்புதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் சில அழகான மற்றும் வேடிக்கையான செயல்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.  யானைகளும், யானைக்குட்டிகளும் பெரும்பாலும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன, அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் மனதை இதமாக்குவதாகவும் அமைந்து இருக்கிறது.  சமீபகாலமாக யானைகள் செய்யும் குறும்புகள் பல இணையவாசிகளை கவர்ந்து வருகிறது, அதேபோல தற்போது ஒரு கும்கி யானையின் கியூட் செயல் … Read more

ஓசூரில் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு: குடியிருப்புவாசிகள் அச்சம்

ஒசூர்: ஓசூர் கே.சி.நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் பல இடங்களில் முட்புதர்கள் சுத்தம் செய்யப்படாத கழிவு நீர் கால்வாய்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்த அடிக்கடி விஷ பாம்பு, பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இந்த பகுதியில் பல இடங்களில் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. கே.சி.சி. நகர் பகுதியில் அமைக்கப்படாத சாலைகள், சுத்தம் செய்யப்படாத கழிவு … Read more

திடீரென வெளுத்து வாங்கிய மழை – சென்னையின் சாலைகளில் நிரம்பிவழிந்த தண்ணீர்

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், பல இடங்களில் திடீரென மழை கொட்டியது. கடந்த 2 வாரங்களாக வெயிலில் தகித்த சென்னையை குளிர்விக்கும் வகையில் மாலையில் பரவலாக மழை பெய்தது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுதாங்கல் என பல்வேறு இடங்களில் திடீரென பெய்த மழையால் சில இடங்களில் தண்ணீரும் தேங்கியது. சென்னையின் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, போரூர், பல்லாவரம், … Read more

'இதை செய்தால் நகைக்கடனை உடனே தள்ளுபடி பன்னிடலாம்' மக்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்.! 

இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்பொழுது, “ரூ.3969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் பேருக்கு 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் ரத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரத்தை கொடுக்காத காரணத்தால் கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் நிலுவையில் இருக்கிறது. அந்த நபர்களும் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக … Read more

7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

ரஷ்யாவில், பள்ளிக்கூடத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்; 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கூடிய கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கிக்கிச் சூடு … Read more

குலசேகரபட்டினம் தசரா விழாவில் நடிகர்கள் பங்கேற்கலாம்; ஆபாச நடனம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: குலசேகரபட்டினத்தில் இன்று தொடங்கி 10 நாள் நடைபெறும் தசரா கலை நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம், ஆனால் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பத்து நாட்களும் குலசேகரபட்டினம் முழுவதும் பல்வேறு குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சிகளில் ஆபாசம் அதிகமாக … Read more

கோர்ட்டுக்கு போன திருமாவளவன்… நடக்குமா ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக் … Read more