திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோயில்; பக்கவாட்டு சுவரை உடைத்து மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக மாறிய அவலம்
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள கோயிலின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் மது அருந்தும் கூடாரமாக இருப்பதாகவும், தனிநபர் அபகரித்துள்ள கோயில் நிலங்களை மீட்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேசனேரி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அங்காள ஈஸ்வரி சம்பவித்த பாலகுருநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழாவின் போது ஒலிபெருக்கி அமைத்து ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு பாடலை ஒலிக்க செய்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் மூடப்பட்டது. இதையடுத்து கோயில் … Read more