திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை – எம்எல்ஏ!

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஏழு பேரை அழைத்து சென்று … Read more

திருச்சி: காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் – காவலர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது தொடர்பாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தரிடம் செல்போன் திருடியதாக முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், காவல்நிலைய கழிவறையில் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். முருகானந்தம் தனது இடுப்பில் அணிந்திருந்த கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான அவர் மீது, தாயை அடித்துக் கொன்ற வழக்கு … Read more

ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எதிர்ப்பு.. அக்.2 சமூக நல்லிணக்க ஊர்வலம்.. திருமாவளவன் மனுவில் புதிய தகவல்!

ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எதிர்ப்பு.. அக்.2 சமூக நல்லிணக்க ஊர்வலம்.. திருமாவளவன் மனுவில் புதிய தகவல்! Source link

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழகத்தில் 11 வழக்குகளில் 14 பேர் கைது: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக பெட்ரோல், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, … Read more

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு… என்ன காரணம்?

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இவர் சென்னை ஓட்டேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்.,26) இரவு 11 மணியளவில் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  உடற்கூறு ஆய்விற்கு பிறகு தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து … Read more

Chennai Power Shutdown, 27th September: போரூர், அடையார், ஆவடி, திருவேற்காடு, வியாசர்பாடி பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown, 27th September: போரூர், அடையார், ஆவடி, திருவேற்காடு, வியாசர்பாடி பகுதிகளில் இன்று மின்தடை Source link

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற கூலி தொழிலாளியின் மகள்.!

கூலித் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கூலித் தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயாவுக்கு, சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று ஆசையும், இலட்சியமும் ஆகும்  பெற்றோர் கொடுத்த ஊக்கம் காரணமாக பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக அவர் தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார். அதன்படி … Read more

அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன ஆவணங்கள் மீட்பு: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து கைப்பற்றியதாக சிபிசிஐடி தகவல்

சென்னை: அதிமுக அலுவலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இரட்டை தலைமையின்கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின்கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்துக்குள் செல்ல ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்முற்பட்டனர். அவர்கள் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் அப்போது ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளர்கள் … Read more

”மிஸ் இந்தியா வெல்வதே லட்சியம்” – மிஸ் தமிழ்நாடு அழகியாக சாதித்த கூலித் தொழிலாளி மகள்!

சாதித்து காட்டிய கூலித் தொழிலாளியின் மகள்.. மிஸ் தமிழ்நாடு பதட்டத்தை வென்று சாதனை.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா (20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையில் இருந்தபோதும் தனது சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு … Read more

மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி காளியம்மாளிடம் பிரச்சனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட போது அங்கு வந்த மாமனார் உருவாட்டி கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் தான் … Read more