"நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் பொம்மைபோல செயல்படுகிறார்" – செல்லூர் ராஜூ

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, எடப்பாடியாரின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…’மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். … Read more

விருத்தாசலம் | சாலை மறியலின்போது பெண் போலீஸ் மீது பெட்ரோல் ஊற்றியதால் கண் பாதிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலைக் கண்டித்து ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியல் செய்ய முயன்றபோது, அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது ஒருவர், பெண் போலீஸ் மீது பெட்ரோல் பாட்டிலைக் கொட்டியதால், கண் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் காவலர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் 4.5 ஏக்கர் நீர் நிலைப் பகுதியை ஆக்கிரமித்து இந்திராநகர் என்ற பெயரில் சுமார் 75 குடும்பத்தினர் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளனர். … Read more

புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..! – ஈரோடு மக்கள் குஷி..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோட்டில் முதல்வர் நல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். கொங்கு மண்டல பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்டப்பணிகள் மற்றும் ரூ. 261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈரோடு பாதாள சாக்கடை … Read more

ஜி.யு.போப் குறித்த சர்ச்சை பேச்சு : ஆளுநருக்குக் குவியும் கண்டனங்கள்

டெல்லியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆன்மிகத் தன்மையை சிதைக்கும் நோக்கில், இந்திய வரலாறு, இந்திய கலாச்சாரத்தை சிதைத்தனர். அதனால், காலனி ஆதிக்க மனோபாவத்துடன் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்.  திருக்குறளை வாழ்வியல் நெறிகள் மட்டும் என்பது போல் இப்போது குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் அதில் ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து … Read more

கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு: விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: மாணவி மரண வழக்கில் கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் வரும் செப். 9ம் தேதி வரை காவல் நீடிப்பு என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேருக்கும் ஐகோர்ட் ஜாமின் வழங்கினாலும் அது தொடர்பான ஆவணங்கள் விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கிடைப்பதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேருந்து- பள்ளி வேன் மோதி விபத்து; நசுங்கிய ஆட்டோ… பள்ளிக் குழந்தைகள் காயம்

திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து சென்ற தனியார் வேனும், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில் நோக்கிச் சென்ற தனியார் பாலிடெக்னிக் பேருந்தும் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள குறுக்கு சாலையில நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அருகே இருந்த ஆட்டோ விபத்தில் சிக்கி நசுங்கியது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதி கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும் பத்துக்கு … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்த ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி!

BWF World Championship 2022, Badminton Highlights in tamil: 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை களமாடினர். உலக சாம்பியன்களான ஜப்பானின் டகுரோ ஹோக்கி மற்றும் யூகோ கோபயாஷியை எதிகொண்ட இந்த ஜோடி, அவர்களை 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். … Read more

#Breaking: விஷாலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..! ரூ.29.29 கோடி கடன்.. சிக்கித்தவிக்கும் நடிகர்.!

நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்யுமாறு விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளனுமான விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்கு கோகுலம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ₹.29.29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஏற்று கடனை செலுத்தியது. இந்த கடனை ஏற்று செலுத்துவதற்காக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த கடனை செலுத்தும் வரை … Read more

இன்றும் நாளையும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வரும் 28ம் தேதி திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 29ம் தேதி 13 மாவட்டங்களிலும் 30ம் … Read more

திருச்சி சந்திப்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம்

திருச்சி: திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்துக்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.81.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 மார்ச் மாதம் தொடங்கியது. இதில், அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து … Read more