பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை மாநகராட்சி சார்பில் இரு நாட்கள் நடைபெறும் சென்னை தின விழா மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று தொடங்கியது பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை தினத்தைகொண்டாடும் வகையில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் இரு நாட்கள் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி … Read more

கேரளாவை பின்பற்றி ஆட்டோ முன்பதிவுக்கான ‘அரசு செயலி’ தமிழகத்திலும் அறிமுகமாகுமா?

ஆட்டோ முன்பதிவுக்கான அரசு செயலியை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதைப் பின்பற்றி தமிழகத்திலும் செயலியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டோ என்னும் வாகனம் பொது போக்குவரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தாலும், பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கட்டணம் தொடர்பான மோதல் தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் டாக்சி, ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியை ஆக.17-ம் தேதி அரசே தொடங்கியுள்ளது. இந்தச் செயலியில் பேனிக் பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. … Read more

காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வேலூர்: ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர் சத்துவாச்சாரியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் 3.50 கோடியாக உள்ளனர். இவர்களை இலக்காக வைத்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 27 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் … Read more

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், மா.ஆர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராம ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தை தமிழக … Read more

3% அகலவிலைப்படி உயர்வை ஜன.1 முதல் அமலாக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தீனதயாள் தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், தலைமைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படியை ஜூலை 1 முதல்வழங்காமல் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி 34 சதவீதமாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 2019 ஏப்.1 முதல் கடந்த … Read more

ஆர்எஸ்எஸ்க்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும் – வானதி அழைப்பு

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு பயிற்சி கொடுக்க பெரம்பலூரில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் இவ்வாறு கூறினார்… இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவதை தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவார்கள் மீது புகார் கொடுத்தாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…. … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய கடுமையான சட்டம்: பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழ்நிலையில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், பேராசையின் காரணமாகவும் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாக மாறினர். தற்போது சூதாட்ட செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் … Read more

போலீஸ் வாகனத்திலிருந்து தப்பி மரணித்த நபர்! விசாரணைக்கு அழைத்து சென்றபோது விபரீதம்

செஞ்சி அருகே விசாரணைக்கு அழைத்து வந்த ஒருவர் சிறுநீர் கழிப்பதாகக் கூறி காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சூரப்பந்தங்கள் கிராமத்தைச் சார்ந்த 18 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, வன்கொடுமை செய்துவிட்டதாக அவரது தாய் மீனாட்சி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகிய … Read more

மதுரையில் மாபெரும் புத்தகக் காட்சி தமுக்கம் அரங்கில் செப்.2-ல் தொடக்கம்

மதுரை: மதுரையில் மாபெரும் புத்தக கண்காட்சி தமுக்கம் அரங்கில் செப். 2-இல் தொடங்கும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல். இது தொடர்பாக மதுரை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. “மதுரையில் கடந்த 2005 முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், செப்., 2ம் தேதி முதல் 12ம் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை ஜோடி சேர்த்த திருவாரூர் திருமணம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அவர்களின் நெருங்கிய உறவினர் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருமண மண்டபத்தில் வாயிலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது புகைப்படங்களும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் படமும், இ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோரின் படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், திருமண அழைப்பிதழிலும் கூட எடப்பாடி பழனிசாமி … Read more