Tamil news today live: சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால்

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு … Read more

ரூ.5 கோடி கடனுக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

சென்னையில், மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி  5 கோடி ரூபாய் பெற்று திருப்பிச் செலுத்தாத ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை வைத்து இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர்.  நிதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சரவணன், மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம், 5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பலமுறை வாங்கிய தொகையை திருப்பி கேட்டும் சரவணன் … Read more

புதிய மின் கட்டண முன்மொழிவால் வீட்டு நுகர்வோருக்கு என்னென்ன பாதிப்பு?

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கட்டண விவரங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பொதுமக்கள், தொழில்துறையினர் தெரிவிக்க கருத்துக்கேட்பு கூட்டம் கோவை, மதுரையில் நிறைவடைந்துள்ளது. சென்னையில் நாளை (ஆக.22) கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய முன்மொழிவால் வீட்டு நுகர்வோருக்கு உயரும் கட்டணம் குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய முன்மொழிவின்படி … Read more

டெல்லிக்கு அடிக்கடி ஃபோன் போடும் பிடிஆர்… என்ன காரணம்?

பிடிஆர் விருப்பம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிவின் கூட்டம் பல்வேறு மாநிலங்களின் தலைநகரம் அல்லது பிரபல நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடைசியாக 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஹரியானா மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தின் மதுரை மாநகரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுகொள்ளும் … Read more

அடம் பிடித்து நாடகம் ஆடும் ஆளுநர் – சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இதுவாகும். குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு UGC விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. … Read more

எடையூர் முதல் கோட்டகம் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிழக்கு கடற்கரை சாலை வாண்டையார் பேருந்து நிறுத்தம் முதல் அனுமந்தன் கோட்டகம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சோத்திரியம் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 12 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்வழியாக தான் எடையூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல … Read more

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை | அப்பல்லோ மருத்துவமனை மீது தவறே இல்லை: எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட 7 பேர் … Read more

ஆன்லைனில் போலி ரியல் எஸ்டேட் விளம்பரம் – ரூ.11 லட்சம் மோசடி!

ஆன்லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஓ.எல்.எக்ஸ். ஆன்லைன் விற்பனை தளத்தில் எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறி ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி, கோவையை சேர்ந்த எல்சன் என்பவர் 11 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர், … Read more

வடலூர்-கருங்குழி சாலையில் பாலம் அமைக்கும் பணி மந்தம்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வடலூர்: வடலூர்- கருங்குழி செல்லும் சாலையில் புதியபாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வடலூர் அருகே கருங்குழி செல்லும் சாலையில் ஏற்கனவே பாலம் இருந்தது. அதை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி துவங்கி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த பாலம் வழியாக தான் கொளக்குடி, மேட்டுக்குப்பம், நைனார்குப்பம் ஆகிய ஊருக்கு இந்த பாலம்மக்கள் செல்ல வேண்டும். இங்கு தனியார் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, வள்ளலார் சித்தி வளாகம், … Read more

அப்பா இல்லை, ரோட்டில் பெட்டிக் கடை வைத்திருக்கும் அம்மா… கோ கோ-வில் கனவைத் துரத்தும் விக்கி!

Ultimate Kho Kho 2022 – Chennai Quick Guns Tamil News: கோ கோ, நம் மண்ணில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால், இவ்விளையாட்டு பள்ளி – கல்லூரிகள் அளவில் மட்டுமே அதிகம் விளையாடப்படும் ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுகளைப்போல் இந்த விளையாட்டுக்கு சர்வதேச அளவில் முக்கியத்தும் வழங்கப்படாமலும் இருக்கிறது. ஆனால், தற்போது இருக்கும் நவீன விளையாட்டு உலகம் அதை மாற்றும் முன்னெடுப்பை எடுத்துள்ளது. அவ்வகையில், ஐபிஎல், புரோ கபாடி லீக் … Read more