சிறந்த ஆலோசகர்களால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: அமைச்சர் பிடிஆர் பேச்சு

சென்னை: “நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும்” நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர்., “ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், … Read more

செந்தில் பாலாஜி அடிக்கப் போகும் சிக்ஸர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

தமிழக முதல்வர் கடந்த மாதம் 15ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் வருகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட … Read more

உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையானார்; எடப்பாடி நாஞ்சில் சம்பத் கருத்து

கடலூர்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அரசியல் அனாதையாகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடலூரில் நேற்று நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: அதிமுக தலைவராக நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கை வைத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி. இவர் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றி பெற முடியாது. கொள்ளையடித்த பணத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் … Read more

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை; பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி: வைகோ கண்டனம் 

சென்னை: குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளதன்மூலம் பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “நரேந்திர மோடி முதல்வராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், அதில் பயணம் செய்த 59 பயணிகள் உயிரோடு கருகிச் சாம்பல் ஆகினர். அதற்குப் பின்னர் … Read more

இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று மாணவர்களுக்கு விநியோகம்; பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

வேலூர்: பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் எனப்படும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் சேவையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இச்சான்றிதழ் தேவைப்படுவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியர் … Read more

நடக்கும் பாம்பு… இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ!

ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் பல விலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் கால்கலால் நடக்கும் பாம்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தையே அதிர வைத்து வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பகிரும் எந்த ஒரு வன விலங்குகள் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகத் தவறியதே இல்லை. பொதுவாகவே மனிதர்களுக்கு வன விலங்குகள் மீது ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம், வன விலங்குகளை அதன் இயல்போடு, நாம் அருகே … Read more

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள், அப்பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(34) என்பவரின் கடையில் விற்பனைக்காக 714 பாக்கெட் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்தீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் … Read more

3.7 கிலோ நகைகளை காவல் ஆய்வாளரின் வீட்டில் பதுக்கியது ஏன்..? சகலையால் சங்கடத்தில் சிக்கினார்..!

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 3கிலோ 700 கிராம் நகைகளை பதுக்கி வைத்ததாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், தனிப்படை போலீசாரிடம் சிக்கி உள்ளார். சகலைப்பாடியின் தகாத சகவாசத்தால் போலீஸ் வேலைக்கு வேட்டு வைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அங்கு வேலைபார்த்த முருகன்அவனது பள்ளிக்கூட கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது … Read more

சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள், கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு … Read more

ஆரணி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் வழங்கிய காடை பிரையில் புழுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட காடை பிரையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஓட்டல் உரிமையாளர், அவை புழுக்கள் இல்லை. முட்டையை ப்ரை செய்யும்போது, அதன் கொழுப்பு சில நேரங்களில் திரிதிரியாக மாறி புழுக்களை போல் தெரியும் என கூறியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர்கள், ஆரணி உணவு … Read more