திருவண்ணாமலை || எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்த பெண் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அரியபாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் விஜயலட்சுமி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மாடு கிணற்று அருகே சென்றதால் அதனை விரட்டுவதற்காக கிணற்று அருகே சென்ற விஜயலட்சுமி எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இவருக்கு நீச்சல் … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கிவிட ‘நேருக்கு நேர்’ ஆலோசனை திட்டம் – மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக 200 வார்டு பொறியாளர்களுடன் 15 நாட்கள் ‘நேருக்கு நேர்’ ஆலோசனை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை 4 மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி தொடங்கியது. இதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முதல் கட்டத்தில் ரூ.86 கோடியில் 45.23 … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை..! – காவல் துறையை சார்ந்த 17 பேருக்கு சிக்கல்..!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை … Read more

திருத்தணி அரக்கோணம் சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது வருகிறது. நாடுமுழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விநாயகர் சதுர்த்தி விழா.  இந்துக்களால், ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வாங்கி பொதுஇடத்தில் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து, விநாயகர் சிலைகள் 3 முதல் 9 நாட்கள் … Read more

பார்சல் வாங்கிவந்து பழரசம் அருந்திய தாய்,மகள்-கடைசியில் நேர்ந்த சோகம்; உறவினர்கள் சந்தேகம்

கோவில்படடி அருகே பார்சல் வாங்கிவந்து வீட்டில் பழரசம் அருந்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் உயிரிழ்ந்தநிலையில், தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (42). கடம்பூர் சாலையில் ஓட்டல்கள் வைத்து பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (35). இவர்களது மகள் லெட்சுமிபிரியா (15). தாழையூத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாலிங்கத்தின் மனைவி … Read more

தழுதழுத்த வைகோ: நெல்லை கண்ணனுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். இலக்கியப் பேச்சாளராகவும் பட்டிமன்ற நடுவராக தமிழ்நாடு முழுவதும் தனது பேச்சாற்றாளால் மக்களைக் கவர்ந்தவர். தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீவிர பற்றுகொண்ட … Read more

விருதுநகர் || இருசக்கர வாகனத்தின் மீது மொபட் மோதி விபத்து – வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கரராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவர் இருசக்கர வாகனத்தில் அட்டைமில் முக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அய்யனார்புரத்தை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மொபட் சுரேஷ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மொபட்டில் வந்த குருமூர்த்தி காயமடைந்த நிலையில் … Read more

16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் : சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு..!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உள்ளிட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ் பி பரிந்துரைத்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார்.  Source link

ஆர்டர்லி முறை ஒழிப்பு நடவடிக்கை: டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை: ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தகது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார். காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை … Read more

ஆர்எஸ்எஸ் உருவாக்குகிற 'கலாச்சாரம்'இதுதான்..! – கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!!

குஜராத் மாநிலத்தில், முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் கண் முன்பாகவே அவருடைய குழந்தை உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேர், 75ஆவது சுதந்திர நாளில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை ஆரத்தி எடுத்து கொண்டாடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உருவாக்குகிற சமூகத்தின் ‘கலாச்சாரம்’ இதுதான் என்பது அம்பலப்பட்டு … Read more