கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் | “அறிக்கை கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: “கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் குறித்து சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது பின்புலம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். அதுதொடர்பான அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரே மணிகண்ட பூபதி, கல்வி … Read more

nellai kannan: தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து களம் கண்ட தமிழ் கடல்!

பன்முகம்: தமிழ் கடல் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலாமானார். தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தில் கரை கண்டவராக திகழ்ந்த அவருக்கு மேடை பேச்சாளர், சொற் பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் என பன்முகங்கள் உண்டு. அரசியல் முகம்: பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி மகாபாரதத்தில் கர்ணன் வரை பல ஆளுமைகள் குறித்த நெல்லை கண்ணனின் ஆர்ப்பரிக்கும் பேச்சை யூடியூப்பில் கேட்டு வியக்கும் இன்றைய … Read more

கல்வி டிவி சிஇஓ நியமனத்தால் சர்ச்சை: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அப்டேட்

கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதலமைச்சர் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் … Read more

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் சுட்ட போலீசார்: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் போலீசார் சுட்டு கொன்றுள்ளதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது. தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது அம்பலமாகியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை. தூத்துக்குடி கலவரம்: … Read more

மதுரை: போலீசை ஏமாற்றி தப்பிய கைதி.. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது எஸ்கேப்!

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கைதி தப்பி ஓடிய நிகழ்வு மதுரையில் அரங்கேறி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த பத்மேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலனுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை கைதியாக அவர் இருந்து வந்தார். இந்நிலையில், இவரது 2 கால்கள் அடிபட்டு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவரை சிகிச்சைக்காக … Read more

வணிக கண்காட்சி, உணவு திருவிழா – களைகட்டும் சென்னை

Chennai Tamil News: சென்னை தினத்தையொட்டி தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நந்தனம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இத்திருவிழா வரும் 19ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் கூறுகிறார். இத்திருவிழாவைக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜெகத் கஸ்பர் கூறியதாவது: “383 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக சட்டப் பேரவையின் நிலத்தினை ஆங்கிலேயர் ‘மெட்ராஸ்’ என்று அடையாளப்படுத்திய நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் … Read more

டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான வழக்கில், டெண்டர் தொடர்பான நடைமுறைகளை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் டெண்டரை தற்போதைக்கு வழங்கக்கூடாது என்றும் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  டாஸ்மார்க் டாஸ்மார்க் பார் தண்டர் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம் என்றும், ஆனால் டெண்டர் யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மனுதாரரின் மனுவுக்கு வருகின்ற … Read more

வாகன ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!

தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் 55 ரூபாயில் இருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 85 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் 1,960 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது. இதுபோல் மினி லாரி, இலகு ரக போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு முறை … Read more

மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கம் கடத்தல்.. விமான நிலைய ஊழியர் கைது..!

திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவத்திலான 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்துவதற்கு துணை போனதாக விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவர், விமான நிலைய ஊழியரான யுவராஜிடம் விமானத்தில் வைத்துள்ள பார்சலை வெளியே கொண்டு வந்து உதவுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பார்சலில் இருந்த பவுடர் வடிவில் ஆன தங்கத்தை யுவராஜ், தனது சாக்ஸ் மற்றும் காலணியில் மறைத்து … Read more

“மாநில உரிமையைக் காக்க பாஜக உறவை புதுச்சேரி முதல்வர் முறித்துக்கொள்ள வேண்டும்” – டி.ராஜா

புதுச்சேரி: “புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மாநில முதல்வர் ரங்கசாமி, பாஜகவின் உறவை முறித்துக்கொண்டு வெளியேற வேண்டும். ஆளுநர் அலுவலகம் மத்திய அரசின் ஒரு கட்சி அலுவலகமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இதன் நிறைவு நாள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக தேசியச் செயலர் டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரிக்கு … Read more