சாலையில் அள்ளிப்போடப்பட்ட சாக்கடை கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பரலி நெல்லையப்பர் தெருவில் வெள்ள நீர் வடிகால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.  சுத்தானந்தபாரதி தெருவில் இருந்து பரலி நெல்லையப்பர் தெரு, செங்கேணியம்மன் கோயில் தெரு வழியாக சென்று நல்லேரிக்கு போய் சேர வேண்டும். மேலும் இதில் ரயில்வே நிர்வாகம் கழிவுநீரை விடுவதால் ஏரியில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாயில் இருந்த சாக்கடை கழிவுகளை முறையாக லாரிகள் … Read more

வானுயர வளர காத்திருக்கும் மரங்கள்; களிமண்ணால் செய்யப்படும் விதை விநாயகர் சிலைகள்: நெல்லை மண்பாண்ட தொழிலாளர்கள் புதிய முயற்சி

நெல்லை: வானுயர வளர காத்திருக்கும் விதைகளை பயன்படுத்தி களிமண்ணால் விநாயகர் சிலைகளை நெல்லை காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்து அசத்தியுள்ளனர். இந்த சிலைகளை வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி, கூனியூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு விதவிதமான மண்பானைகள், சுவாமி சிலைகள், பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் அழகு சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. … Read more

'அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம், நாம் வேடிக்கை பார்ப்போம்' – சீமான்

அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம். அதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள். அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் … Read more

SSC; மத்திய அரசில் ஜூனியர் என்ஜினியர் வேலை; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

SSC recruitment 2022 for Junior Engineer jobs apply soon: மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் என்ஜினியர்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் … Read more

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஓபிஎஸ் கருத்தை ஆதரிப்பார்கள் – டிடிவி டிவிட்..!

ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் ஆதரிப்பர் என தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக செயல்பட சின்னமாவும் தினகரனும் அதிமுகவில் இணைய வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து, டிடிவி தினகரன் ஓ.பி. எஸ் கருத்தித்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,   தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற … Read more

இணைந்து செயல்பட ஓபிஎஸ் கோரிக்கை… கோரிக்கையை நிராகரித்தார் இபிஎஸ்

ரவுடிகளோடு சென்று அதிமுக தலைமையகத்தைத் தாக்கிச் சேதப்படுத்திச் சூறையாடியவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என வினவியுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டுத் தலைமையாகச் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது எனத் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதவிதான் முக்கியம் என்றும், உழைக்காமல் பதவி வேண்டும் என … Read more

“ஓபிஎஸ் கருத்தை சுயநலமற்றவர்கள் வரவேற்பர்” – டிடிவி தினகரன்

சென்னை: “ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது … Read more

பெரியகுளத்தில் ஓபிஎஸ்… அடுத்து எடுக்கப் போகும் அதிரடி முடிவு… அதிரப் போகும் அதிமுக!

ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதன்மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாதது ஆகிவிட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோர் தனித்தனியே நியமித்த நிர்வாகிகளின் பதவிகளும் இல்லாமல் போனது. அதாவது, ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுகவில் பிளவுபட்டு கிடக்கும் இரண்டு தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு … Read more

காலமானார் ’தமிழ்கடல்’ நெல்லை கண்ணன்

இலக்கியவாதியும்,பிரபல பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ்நாட்டு முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதல்வர் காமராஜர்,கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாய் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.  1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001-ம் … Read more

'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்..!

நெல்லை: தமிழறிஞர் நெல்லை கண்ணன் (77) உடல்நலக் குறைவால் காலமானார். சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் தமிழ்க்கடல் என அழைக்கப்பட்டார். 1970-ம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் நெல்லை கண்ணனின் தமிழ் ஒழித்து வந்தது. 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் நட்புறவில் இருந்தவர். தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதை அண்மையில் பெற்றிருந்தார் … Read more