'அழைப்பு விடுத்த ஓபிஎஸ்; கண்டுகொள்ளாத இபிஎஸ்' மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு!

`இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.   கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக்கூட்டத்துக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தனர். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் … Read more

சிறுகோள்கள் பூமிக்கு நீர் கொண்டு வந்ததா? ஹயபுசா-2 ஆய்வு கூறுவது என்ன?

நேச்சர் அஸ்ட்ரோனமி இதழில் கடந்த (ஆகஸ்ட் 15) ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து நமது கிரகத்திற்கு தண்ணீர் மற்றும் கரிம பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் ஹயபுசா-2 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ரியுகு என்ற சிறுகோளை ஆய்வு செய்து அதன் தரவுகளை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அனுப்பியது. ஹயபுசா-2 ஆய்வு மூலம் … Read more

#BREAKING : ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த ஈபிஎஸ் தரப்பு.!

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பவழங்கியது. இந்த தீர்ப்பில் பொதுக்குழுவின் முடிவுகள் செல்லாது என அறிவித்திருத்தது. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் ஆனது மற்றும் ஓ. பன்னீர்செல்லவத்தை கட்சியை விட்டு விலகி வைத்தது போன்ற முக்கிய முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றுபட வேண்டும். சசிகலாவும் , தினகரனும் வந்தால் கட்சியில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். மேலும்,  சின்னமாவும், தினகரனும் கட்சியில் … Read more

தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்

ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர்கள் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ(மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரியாறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே … Read more

சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் உள்ளது. இதன் அருகிலேயே பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோனில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன. அதன்படி இங்கே பிளைவுட்ஸ், சமையல் எண்ணெய் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றை தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 9.45 மணியளவில், எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் … Read more

கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவியின் ஆபத்தான பயணம் – வைரலாகும் வீடியோ

மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவி கால்களை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்த பதபதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இந்நிலையில், ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் ரயிலில் ஏறினர். அப்போது அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ரயில் படிக்கட்டில் நின்றவாறு கால்களை நடைமேடை முடியும் வரையில் தேய்த்தவாறு … Read more

மதிய உணவு தொடர்பாக புகார் தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி; நீதிமன்ற ஊழியர் சஸ்பெண்ட்

Arun Janardhanan Madras HC judge complained over lunch, got court staffer suspended: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், “எந்தவொரு பொது ஊழியரும் முகலாய பேரரசர்களின் உலகத்தை கற்பனை செய்யவோ அல்லது வாழவோ முடியாது” என்று குறிப்பிட்டு, தமிழக காவல் துறையில் காலனித்துவ ஆர்டலி முறையைப் பற்றி கருத்து தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டப்படி மதிய உணவு கிடைக்காததால் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் நீதிமன்ற … Read more

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட … Read more

மீண்டும் ஒன்றிணைவோம்: எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் உருவானது. பழையபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மகிழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய … Read more