தமிழக செய்திகள்
திருவள்ளூர் | அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை: பெற்றோர் மகிழ்ச்சி
ஆவடி: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகச்சீரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, வீராபுரம் ஸ்ரீ வாரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சவுபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகளான டானியா (9), அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு … Read more
முதலில் சேலம்… அப்புறம் கொங்கு… காலியாகும் எடப்பாடி கூடாரம்? ஓபிஎஸ் தரப்பு பலே பிளான்!
அதிமுகவின் தலைமை பீடத்தில் அமரப் போவது யார்? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை தெரியவில்லை. இதற்கான போட்டி, மோதல், வழக்குகள், திருப்புமுனைகள் என அதிரி புதிரி சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கொளுத்தி போட்டது. ஏனெனில் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவே … Read more
அமைச்சருடன் பேச்சுவார்த்தை காரணமாக இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
மதுரை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் நிர்வாக இணை ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன், நிர்வாகிகளுடன் நேற்று சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை முடிவு குறித்து, நேற்று மதுரை … Read more
விடுமுறை நாட்களில் தொடரும் கூடுதல் கட்டண வசூல்: ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்
விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு ரயில் சேவை இல்லாததால், ஆம்னி பேருந்துகளை நம்பியே அவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு … Read more
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பரிசு!
ஒருநாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், க.பொன்முடி, த.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, தமிழகத்தில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட புதிய டொயோட்டா ஃபார்ச்சூனரில் அமர்ந்து ஸ்டாலின் பயணித்தார். முதலில் காலை 10.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து … Read more
புதுச்சேரி பட்ஜெட் 22ம் தேதி தாக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடரில் 2வது பகுதியாக வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினத்தில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை பேரவை முன் முன்னிலைப்படுத்துவார் என்றும், சட்டப்பேரவை தலைவர் அறிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. 22ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப்பின் அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்த … Read more
கட்கரி வெளியே, பட்னாவிஸ் உள்ளே: பாஜக உயர்மட்ட குழுவில் எடியூரப்பா, வானதி.. முழு விவரம்!
பாரதிய ஜனதா கட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மத்திய தேர்தல் குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 17) சீரமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாக இந்த மத்திய தேர்தல் குழு உள்ளது. 11 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில் தற்போது 6 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். ஏடியூரப்பா, முன்னாள் ஐஏஎஸ் … Read more
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் – ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.!
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீசெல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது உறுதியாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். அந்த இடத்திற்கு வேறு யாரும் இனி வர முடியாது, வரக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் முடிவு எடுத்து அதற்கு பதிலாக அதிமுகவை இரட்டை தலைமையாக … Read more