கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; … Read more

ஆயுள் தண்டனை கைதியை காதலியுடன் ஓட்டலில் தங்க விட்டு காவல் காத்த போலீஸ்.. இதுலாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சிறையில் இருந்து வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வெளியே அழைத்துச்செல்லப்பட்ட 55 வயது ஆயுள் தண்டனை கைதியை, நடுவில் காதலியுடன் ஓட்டலில் தங்குவதற்கு அனுமதித்த 3 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கையூட்டு பெற்றுக் கொண்டு ஓட்டல் வாசலில் பலத்த காவலில் ஈடுபட்ட காவலர்கள் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பச்சாகான்..! 55 வயதான இவர் இர்பான் கான் என்பவரை கொலை செய்த வழக்கில் … Read more

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜக மகளிரணி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, … Read more

ஓ.பன்னீர்செல்வம் போட்ட ஸ்கெட்ச் – டென்ஷனில் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழக அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சொந்தமானது எனத் தீர்ப்பு அளித்த உயர் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் … Read more

புதிய தலைமுறை அறக்கட்டளை அறிமுகப்படுத்தும் வள்ளி செயலி -சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்வு

75வது சுதந்திர தின ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ’’வள்ளி செயலி’’ உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், புதிய தலைமுறை அறக்கட்டளையின் வள்ளியம்மை அம்மாள் மருத்துவ உதவித் திட்டத்தின் மூலம் “வள்ளி சிறப்பு … Read more

ஒரே மாதத்தில் 3 மான்கள் பலி : மேட்டுப்பாளையம் சாலையில் தொடரும் சோகம்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை அகஸ்தியர் ஞான பீடம் செல்லும் வழியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உணவு தேடி வந்த புள்ளிமான் ஒன்று தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்டது. மானை பார்த்த நாய்கள் அதனை தாக்கிய நிலையில், புள்ளிமான் உயிரிழந்தது. இந்த சம்பவம் தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் … Read more

கோவில்பட்டி : ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. 2 பேர் கைது.!

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் (வயது 63), இவர் அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையில் தொடர்புடைய கார்த்திக்(வயது 33) மற்றும் வசந்த் (வயது … Read more

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமையன்று ஸ்ரீமதியின் தோழிகள் இருவர், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர். மாணவியின் இரு பிரேதப் பரிசோதனைகள் குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு … Read more

“பெரிய நிறுவனங்களிடம் வசூல் வேட்டை நடத்தவே மின் கட்டண கருத்துக் கேட்பு கூட்டம்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “மின் கட்டண குறைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நிறுத்திவிட்டு, உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான அர்ஜுனமூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பாஜகவின் … Read more