நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
சென்னை: நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் சங்கம் சார்பில் ‘வந்தே பாரதம்’ என்ற ஒலி, ஒளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை திருவல்லிகேணி என்.கே.டி. கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தேச விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்த … Read more