பழிக்குப் பழியாக ரவுடியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்

கோயம்பேடு அருகே சாலையில் நடந்து சென்ற ரவுடி வெட்டிப் படுகொலை ஓராண்டுக்குப் பிறகு நண்பரின் கொலைக்கு பழிதீர்த்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28), ரவுடியான இவர், திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு கோயம்பேடு மந்தைவெளி தெருவில் நடந்து சென்ற ராஜ்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதில், … Read more

மென்மையான தலைமுடிக்கு ரசாயனமில்லாத கெரட்டின் சிகிச்சை.. வெண்டைக்காய் போதும்

கெரட்டின் என்பது முடியின் இயற்கையான புரதமாகும், இது கோர்டெக்ஸ் மற்றும் க்யூட்டிகில் உள்ளது. வயது, சுற்றுச்சூழல், ஸ்டைலிங், மோசமான உணவு, புகைபிடித்தல் போன்றவற்றால் இது குறைகிறது. மேலும் முடி உதிர்தல் மற்றும் கட்டுப்படுத்த முடியாத முடிக்கு வழிவகுக்கிறது. ஆனால் உங்கள் மிருதுவான முடிக்கான தீர்வு, வெண்டைக்காயில் உள்ளது. வெண்டைக்காய் இயற்கையான கண்டிஷனர் என்று கூறப்படுகிறது. பட்டுப்போன்ற, நேரான கூந்தலைப் பெற வீட்டில் இரசாயனமில்லாத கெரட்டின் சிகிச்சை எப்படி செய்யலாம் என்பது இங்கே. “இது பளபளப்பான மற்றும் மிருதுவான … Read more

காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு

காரைக்குடி அருக செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு நடந்து வரும் நிலையில், உடான் திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907 ஏக்கரில் அமைந் துள்ளது. இந்த பண்ணை வளாகத்தில் இரண்டாம் உலகப்போரின்போது 1944-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்கள் உள்ளன. அவை தற்போது வரை பெரிய அளவில் சேதமடையாமல் காணப்படுகின்றன. காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர்களும், … Read more

புதுக்கோட்டை: மாட்டுவண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்து பரிசுகளை தட்டித் தூக்கிய மாடுகள்

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. புதுக்கோட்டை அருகே கைகுறிச்சி கிராமத்தில் உள்ள காளியம்மன், சுந்தர விநாயகர், பொற்பனை முனீஸ்வரர் ஆகிய கோயில்களின் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சனம் நடைபெற்றது. இதில், 8 மைல் தொலைவிற்கு கைகுறிச்சியில் இருந்து குளவாய்ப்பட்டி வரையில் நடைபெற்ற பெரிய மாட்டுவண்டி பந்தையத்தில் மொத்தம் மாட்டு வண்டிகள் பங்கேற்றன. … Read more

விழுப்புரம் | பள்ளி கலவர வழக்கில் 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து இப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி வன்முறைக் கும்பல் புகுந்து, வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தது. இந்த கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 296 பேருக்கான … Read more

தள்ளிப்போகும் TET Paper 1 தேர்வு தேதிகள்! தேர்வு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களினால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாள்-1க்கான தேர்வு, செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. … Read more

Tamil News Live Update: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியா்கள் பதக்கம் வென்றனா். ஓபன் பிரிவில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப் பதக்கம், இந்திய பி … Read more

நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து ரூ.40 லட்சம் மோசடி – பெண் ஊழியர் கைது

கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த பெண் ஊழியரை காவல் துறையினர்  கைது செய்தனர். குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஐ.சி.எல். பின்கார்ப் என்ற தனியார் நிதிநிறுவனத்தின் அடகு நகைகளை அதன் தணிக்கையாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் சரிபார்த்தனர். அப்போது, கடந்த நவம்பர் மாதம் முதல் 597 கிராம் போலி நகைகளை வைத்து 40 லட்சத்து 80 ஆயிரத்து 900 ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது … Read more

அரசு ஊழியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு காலக்கெடு நிர்ணயித்து அரசாணை: வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து தலைமைச் செயலர் சமீபத்தில் அரசாணை வெளியிட்ட நிலையில், விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் கோரியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ச.ராமமூர்த்தி தலைமையில் கரூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்துக்கு பிறகு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பேசிய மாநில தலைவர் ச.ராமமூர்த்தி, ‘‘ஒழுங்கு நடவடிக்கை … Read more

குழந்தைபோல் அடம்பிடித்து கரும்புகளை ருசித்த காட்டு யானை

தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை நகராமல் காலால் தடுத்து நிறுத்திய காட்டுயானை, குழந்தை போல் அடம் பிடித்து கரும்புகளை எடுத்து சுவைத்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது தாளவாடி மலைப் பகுதியில் … Read more