மூதாட்டியின் வீட்டில் திருட முயற்சி: பொதுமக்கள் தாக்கியதில் வடமாநிலத்தவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநிலத்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்ததில் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்டனமல்லி பகுதியில் வசிப்பவர் மூதாட்டி வடுவம்மாள் (80). இவரது வீட்டில் திருடுவதற்காக நேற்று நள்ளிரவில் 3 வடமாநிலத்தவர் நுழைந்துள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி கூச்சலிடவே இருவர் தப்பியோடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இந்த நிலையில் பிடிப்பட்ட அந்த … Read more

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.. திருத்தணியில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று பேர் மோகனை வழிமறித்து முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன் குறித்து அவருடைய உறவினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மோகன் திருத்தணி அரசு … Read more

காகித விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு: தினசரி காலண்டர் விலை 40% உயர வாய்ப்பு

காகித விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தினசரி காலண்டர்களின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார். சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவ மைப்புகளில், புதுப்புது ரகங் களில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. தினசரி காலண்டர் தயாரிக்கும் பணிகள் ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கும். தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் பஞ்சாங்கம் … Read more

'கோபாலபுரம் குடும்பத்தால் தலைகுனிவு' – திமுகவுக்கு அண்ணாமலை நெருக்கடி!

தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று பொய்களைப் பரப்பி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் மற்றும் கோபாலபுரம் குடும்பத்தின் ஊடகங்களால் தமிழகத்திற்குத் தலைகுனிவு என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சாடியுள்ளார். விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு கெலோ இந்தியா எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக குஜராத்திற்கு 608 கோடி ரூபாய், உத்தர பிரதேசத்திற்கு 503 கோடி ரூபாய், அருணாச்சல பிரதேசத்துக்கு 183 கோடி ரூபாய், கர்நாடகாவிற்கு … Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனையாகிவருகிறது.சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4850க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4880 ஆக விற்பனையாகிவருகிறது. 24 காரட் 99.99 தூயத் தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5282 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் (8 கிராம்) ரூ.42256 ஆக உள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39040 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் 1.50 காசுகள் உயர்ந்து கிலோ வெள்ளி … Read more

டியூசன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. அரசியல் சம்பந்தம் உள்ள ஆசிரியர்கள் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக, ஆசிரியராக பணியாற்றுபவர்களில் இருந்து சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தமிழகத்தில் இருந்தும் … Read more

வரும் 12-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை..!!

சென்னையை அடுத்த, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு எப்போதும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். அன்றைய தினம் பூங்கா மூடப்பட்டிருக்கும்.  இந்நிலையில், மொகரம் பண்டிகையையொட்டி இன்று (ஆகஸ்ட் 9)  செவ்வாய்க்கிழமை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனை, ஈடு செய்யும் விதமாக வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை நாளாக இருக்கும் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  … Read more

CWG 2022 | இந்திய வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.இனி வருபவை யாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகிவிட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்ஷ்யா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி … Read more

உதயச்சந்திரனுக்கு நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

அரசு இயந்திரம் செயல்பட முக்கியக் காரணமாக இருப்பவர்கள் அரசு அதிகாரிகள். திமுக அரசு மீது பெரிய அளவிலான விமர்சனங்கள் எதுவும் இல்லாததற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் அல்ல. அவரது உத்தரவுக்கு ஏற்ற வகையில், அதனை செயல்படுத்தும் அதிகாரிகளின் பங்கும் முக்கியமானது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அவர் அறிவித்த பல்வேறு அதிகாரிகள் நியமனம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு, முதல்வரின் முதன்மை தனிச்செயலாளர் … Read more

சென்னை: ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்த 7 வயது சிறுவன்

பூந்தமல்லியில் 7 வயது சிறுவன், கடினமான ஓம்கார ஆசனத்தை 6 நிமிடங்களுக்கு மேல் செய்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு ரவி – சரண்யா தம்பதியர். யோகா மாஸ்டரான பாபு ரவிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தர்ஷித் (7) பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே யோகாசனங்களை கற்றுவந்த தர்ஷித், அதில் சாதனை படைக்க வேண்டும் … Read more