கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய அரசின் அதிகபட்ச உயர்தர அங்கீகாரம்

கோவை: கோவை காருண்யா நகரில் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் உயர்தர அதிகபட்ச அங்கீகாரம் 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகம் 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி செயல்பாடுகள் மேற்கொள்ள தங்கும் வசதிகளோடு அனைத்து வசதிகளுடன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய … Read more

ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி ரெசிபி

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உளுந்து சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்திகொள்வோம். தேவையான பொருட்கள்   உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 7, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – ஐந்து பல், தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (20.08.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 20/08/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 22/20/16 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 14/12 உருளை 40/35/26 சின்ன வெங்காயம் 40/34/30 ஊட்டி கேரட் 80/70/55 பீன்ஸ் 55/50/40 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 35/32 சவ் சவ் 22/20 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 18/15 உஜாலா கத்திரிக்காய் 28/25 வரி கத்திரி 27/22 காராமணி … Read more

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்: 1.58 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20) தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 20) தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சத்து 58,157 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி, சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெற … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் . கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்குச் சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விலும் … Read more

திண்டுக்கல் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டி.அய்யம்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த தந்தை காளியப்பன் கத்தியால் குத்தி கொலை செய்த மகன் சரவணக்குமார் கைதாகியுள்ளார்.

நீட் விலக்கு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்- மா. சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவில் குடியரசு தலைவரும், உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் மட்டுமே கிடைக்க வேண்டும். அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு மருத்துவமனைகளில் மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க விரைவில் 4,300 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 200 வகையான பணி நியமனம் நடக்க உள்ளது. அதில் 2 வகையான பணி நியமனம் முடித்தாகிவிட்டது. … Read more

மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களின் அருகாமையில் உள்ள மதுக்கடைகள்  அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பேசிய அவர், மக்களுக்கு இடையூறாக  உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு  என்றும் கூறினார்.  Source link

சென்னை தின கொண்டாட்டம்: எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எலியட் கடற்கரையில் மாலை 3.30 மணி முதல் 11.30 மணி வரை சென்னை தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறகிறது. இதன் காரணமாக பெசன்ட் நகர் 6-வது நிழற்சாலை முதல் போலீஸ் பூத் முதல் மீன் கடை வரை சுமார் 850 மீட்டர் தூரத்திற்கு … Read more