பிங்க் நிறத்தில் மாறும் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள்!

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் முதல் கட்டமாக நாளை முதல் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கையப்பமாக பெண்களுக்கான இலவச பேருந்து அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் ஓடக்கூடிய அனைத்து மாநகர பேருந்துகளும் ஒரே வண்ணத்தில் இருப்பதனால் எது இலவச பேருந்து, எது கட்டண பேருந்து … Read more

கள்ளக்குறிச்சி விசாரணையை பாதிக்கத்தக்க பதிவு, வீடியோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை: சிபிசிஐடி

சென்னை: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக இணைய ஊடகங்களில் புலன்விசாரணையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய வளைதள கணக்குகள், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என்று குற்றப்புலனாய்வு துறை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் … Read more

நீலகிரி: நியாய விலைக்கடையில் நடக்கும் மோசடி – ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர்

கூடலூரில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் சர்க்கரை 200 கிராம் அளவும், அரிசியை 700 கிராம் அளவு குறைத்துக் கொடுத்ததை இளைஞர் ஒருவர் ஆதாரத்துடன் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் நகரில், கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் மகளிர் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த முகமது மன்சூர் என்பவர் மனைவி சர்க்கரை, அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி சென்று இருக்கிறார். வாங்கப்பட்ட … Read more

‘தமிழகத்தின் ராஜபக்சே’ போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி: தினகரன்

சென்னை: தமிழகத்தின் ராஜபக்சே போன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று அமமுக பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆக.15-ஆம் தேதியன்று அமமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். இனத்தை வைத்து … Read more

”தனியாக யாரும் புலன்விசாரணை நடத்தக்கூடாது”-க.குறிச்சி மாணவி விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பான வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு போலீசார் ((சி.பி.சி.ஐ.டி.) வெளியிட்ட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன் விசாரணை … Read more

கோபி- ராதிகாவுக்கு எதிராக போராட்டம்: விஜய் டி.வி கலாட்டா

சின்னத்திரையில் புதிதாக ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி வெற்றி காண்பதில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லாம். பாடல் காமெடி சீரியல் என அனைத்திலும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப வழங்குவதில் கைதேர்ந்த விஜய் டிவியில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்ட்டி. பிக்பாஸ் சீசன் 5-ல் சாம்பியனான ராஜூ மற்றும் 2-வது சாம்பியன் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், காமெடி கலைஞர்களுடன் சேர்த்து டிவி சீரியல் நட்சத்திரங்களை அழைத்து அவர்களுடன் சுவாரஸ்யமாக பல … Read more

கன்னியாகுமரி || மனைவியுடன் தகராறு, கணவன் எடுத்த விபரீத முடிவு..!

மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று யாரும் வீட்டில் இல்லாத போது அவர் விஷமருந்தி மயங்கி கிடந்தார் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு … Read more

மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், கடந்த 20 நாட்களில் 90 டிஎம்சி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 20 நாட்களாக அணை … Read more

Tamil news today live: மாணவி மரணம் தொடர்பாக புலன் விசாரணை நடத்தினால் நடவடிக்கை – சிபிசிஐடி எச்சரிக்கை

Go to Live Updates காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காம் காமன்வெல்த் :குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வெற்றி . காலிறுதியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர், செஷல்ஸின் எவன்ஸ் ஆக்னஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை. பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுதிர். அணை நிலவரம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 … Read more

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டறிவதற்காக காலை, மாலை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற துறையும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா, பெசன்ட் … Read more