தமிழகத்தில் 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு இல்லை: டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

தஞ்சை: தமிழகத்தில் தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு, மே மாதம் தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தப் பருவத்தில் நடவு செய்யப்படும் நெற்பயிர்கள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். அறுவடை நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது நெற்கதிர்கள் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள் பெரும்பாலும் பயிர்க் காப்பீடு செய்வது வழக்கம். இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில … Read more

IND vs WI 2nd T20: தொடக்க ஜோடியில் மாற்றம்? இந்தியாவின் ஆடும் லெவன் இதுதான்!

India vs West Indies Live score Updates Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 … Read more

இருசக்கர வாகனம் இது ஜேசிபி மோதி விபத்து.! கூலி தொழிலாளி உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி மோதி விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்களது மகன் கூலி தொழிலாளி ஹரிகிருஷ்ணன்(30) மற்றும் கவுதம் (29). இவர்கள் இருவரும் வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஜேசிபி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஹரிகிருஷ்ணன் மற்றும் கௌதம் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பில் திமுக கருத்து

சென்னை:” வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்குப் பின்னர், ஒரு முழுமையான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிப்பட்ட … Read more

இதுவல்லவா தைரியம்! தங்கச் சங்கிலியை பறிக்க வந்தவர்களுக்கு பாடம் கற்பித்த சகோதரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், கைகளைக் கட்டி தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபா மற்றும் சுஜி. உடன் பிறந்த சகோதரிகளான இருவரும் ஞாயிற்றுகிழமை இரவு அழகிய மண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது குழந்தைகள் … Read more

தேர்தல் ஆணையக் கூட்டத்தில் ஜெயக்குமார் அதிரடி; ஓ.பி.எஸ் தரப்பு திணறல்

Jayakumar takes ADMK name board from OPS supporter: ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்பு இருந்த அ.தி.மு.க பெயர் பலகையை எடுத்து தனது இருக்கைக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வைத்ததை அடுத்து தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத … Read more

இருசக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.! இளைஞர் பலி.!

இருசக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் குமலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் பசுபதி (26). இவர் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள பால் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பசுபதி குமலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அனுமந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மஞ்சங்குப்பம் அருகே சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பசுபதி … Read more

கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம்: அனுமதி பெறும் பணிகள் தொடக்கம்

சென்னை: கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு, கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ … Read more

லண்டன் பயணிகள் குஷி: சென்னையில் இருந்து தினமும் நேரடி விமானம்

Chennai Tamil News: சென்னை மிக முக்கியமான பன்னாட்டு விமான நிலையமாக திகழ்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதால் இந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்தில் கல்வி, தொழில் நிமித்தமாக தமிழர்கள் அதிகம் உள்ளனர். எனவே சென்னையில் இருந்து லண்டன் செல்லும் நேரடி விமானத்திற்கு எப்போதும் டிமாண்ட் அதிகம்.  தினசரி சென்னையில் இருந்து லண்டனுக்கு இயக்கப்பட்ட விமானங்கள், பெருந்தொற்று காலத்தில் வாரத்திற்கு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டன. இதனால், டிக்கெட்டுகள் பலநாட்களுக்கு … Read more

BREAKING : சென்னை பரந்தூரில் அமைகிறது 2 வது விமான நிலையம்… மத்திய அரசு அறிவிப்பு.!

சென்னைக்கு அருகே பரந்தூரில் 2 வது புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த … Read more